ஒரே ஒரு முறைதான் திஷா சாலியனை சந்தித்துள்ளேன்.. அதுவும் 10 நிமிடம்தான்.. மனம் திறந்த ரியா!
மும்பை: வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் திஷா சாலியனை சந்தித்துள்ளேன் என நடிகை ரியா சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சுஷாந்த் மரணம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் புதுபுது தகவல் வெளியாகி வருகிறது. சுஷாந்த் மரணத்திற்கு ரியாதான் காரணம் என அவரது குடும்பத்தினரும் ரசிகர்களும் ஆரம்பத்தில் இருந்தே குற்றம்சாட்டி வருகின்றனர்.
அவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நாள்தோறும் ஏதாவது ஒரு ஆதாரம் கசிந்து வருகிறது. இந்நிலையில் இந்தியா டுடே ஊடகத்திற்கு, பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார் ரியா சக்ரவர்த்தி.

திஷாவுடன் தொடர்பு
அதில் தன் தரப்பில் உள்ள நியாயத்தையும் பல விடை தெரியாத கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். அதன்படி ஜூன் 8ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சுஷாந்தின் மேனேஜரான திஷா சாலியனுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசியுள்ளார் ரியா சக்ரவர்த்தி.

அதுவும் 10 நிமிடங்கள்
அவர் கூறியிருப்பதாவது, நான் திஷா சாலியனை ஒரு முறை சந்தித்தேன். சுஷாந்தின் கார்ட்டர் ரோடு வீட்டிற்கு அவர் வேலையை தொடங்கிய முதல் நாளில் தன்னுடைய டீமுடன் வந்திருந்தார். நான் அவரை 10 நிமிடங்கள் சந்தித்தேன், அதன்பிறகு, நான் அவரிடம் பேசவில்லை, அவருடைய தொலைபேசி எண்ணும் இல்லை.

ஸ்ருதி மோடி
அதன் பிறகு லாக்டவுன் அமலுக்கு வந்ததால் திஷாவுக்கும் சுஷாந்துக்கும் இடையிலான தொடர்பு எந்தளவுக்கு இருந்தது என்பது கூட எனக்கு தெரியவில்லை. திஷா சாலியன் கடந்த மார்ச் மாதம்தான் சுஷாந்தின் மேனேஜரானார். அதற்கு முன்பாக ஸ்ருதி மோடிதான் அவருடைய மேனேஜராக இருந்தார்.

தூக்கி எறிவார்
ஸ்ருதி மோடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சுஷாந்த் அவரை ஓய்வு எடுக்க கூறினார். லாக்டவுன் என்பதால் சாமுவேல் மிராண்டாவையும் ஓய்வெடுக்க கூறினார். சுஷாந்த் ஆட்களை பணிக்கு அமர்த்துவார். தூக்கி எறிவார், இதையும் இந்த நேரத்தில் நான் தெளிவுப்படுத்துகிறேன்.

சுஷாந்த் கணக்கு
திஷா கார்னர்ஸ்டோன் என்ற நிறுவனத்தின் ஊழியராக இருந்தார். சுஷாந்த் கணக்கை அவர்கள் அவரிடம்தான் ஒப்படைத்திருந்தார். நாங்கள் ஒரே ஒருமுறை தான் சந்தித்துள்ளோம். அதுவும் கடந்த பிப்ரவரி அல்ல மார்ச் இறுதியில்தான் என்று கூறினார் ரியா சக்ரவர்த்தி.

பிரிந்து சென்றார்
ஏற்கனவே ஜூன் 8ஆம் தேதி சுஷாந்துக்கும் ரியா சக்ரவர்த்திக்கும் இடையே பெரும் சண்டை நடைபெற்றது என்றும் இதனால் ரியா சுஷாந்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்றும் சுஷாந்தின் பிளாட்மெட்டான சித்தார்த் பிதானி கூறியிருந்தார்.

திஷா தற்கொலை
ஜூன் 9ஆம் தேதி திஷா சாலியன் மரணமடைந்த தகவல் வெளியானது. அப்போது ரியா சக்ரவர்த்தி சுஷாந்துடன் தொடர்பில் இல்லாததால், அவரது மரணம் சுஷாந்தை எந்த அளவுக்கு பாதித்தது என்று தெரியவில்லை தனக்கு என்றார் ரியா சக்ரவர்த்தி. மேலும் அப்போது சுஷாந்துடன் இருந்தவர்களுக்குதான் அதைப்பற்றிய தகவல் தெரியும் என்றார்.

பயத்தை ஏற்படுத்தும்
மேலும் எந்தவொரு காரணத்திற்காகவும் உங்கள் பெயர் ஒருவருடன் இணைக்கப்படும்போது, நான் செய்தியை படித்தபோது, 'சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மேலாளர் திஷா சாலியன் தற்கொலை செய்துகொண்டார்' என்பது பயத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன், குறிப்பாக யாருடைய பெயர் குறிப்பிட படுகிறதோ அவர்களுக்கு நிச்சயம் பயத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











