கொரோனா கொடூரமா விரட்டுதே.. திருமணத்தை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைத்த பிரபல ஹீரோயின்!

By

மும்பை: கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தனது திருமணத்தை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைத்துள்ளார் பிரபல நடிகை.

உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா தொற்று இந்தியாவையும் விடவில்லை. இதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய மாநில அரசுகள் தவித்து வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். சாதாரண மக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என எவரையும் விடவில்லை கொரோனா. உலக அளவில் இந்தியாவில் தான் அதிக அளவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் இதில் சென்னை, மும்பை, டெல்லி ஆகிய பெருநகரங்களில் கொரோனா பரவல் விகிதம் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

ராணா திருமணம்

ராணா திருமணம்

இந்த கொரோனா காரணமாக பலர் தங்கள் திட்டங்களை மாற்றி வைத்துள்ளனர். சிலர், தங்கள் திருமணத்தை வைத்து பிறகு லாக்டவுனிலேயே நடத்திக் கொண்டனர். தெலுங்கு நடிகர் நிதின், நிகில் சித்தார்த்தா திருமணம் லாக்டவுனில் நடந்தது. வரும் 8 ஆம் தேதி நடிகர் ராணாவின் திருமணம் நடக்க இருக்கிறது. நடிகை பிராச்சி தெஹ்லான் திருமணம் வரும் 7 ஆம் தேதி டெல்லியில் நடக்க இருக்கிறது.

நடிகை ரிச்சா சதா

நடிகை ரிச்சா சதா

இந்நிலையில், பிரபல நடிகை ரிச்சா- நடிகர் அலி ஃபசல் திருமணம் அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நடிகை ரிச்சார், இந்தியில், கேங்ஸ் ஆஃப் வாஸிபுர், பக்ரி, தாஸ் தேவ், பக்ரி ரிட்டர்ன்ஸ், பங்கா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியான இன்சைட் எட்ஜ் என்ற வெப் சீரிஸிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

ஷகிலா பயோபிக்

ஷகிலா பயோபிக்

இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாவில் கிளாமராக நடித்து புகழ்பெற்ற நடிகை ஷகிலாவின் வாழ்க்கை கதை சினிமாவாகி வருகிறது. இந்திரஜித் லங்கேஷ் இயக்கும் இந்த பயோபிக் படத்தில் நடிகை ஷகிலாவாக நடித்து வருகிறார் ரிச்சா. இவரும் பக்ரி படத்தில் ரிச்சாவுடன் நடித்த நடிகர் அலி ஃபசலும் காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் நடப்பதாக இருந்தது.

வேறு வழி இல்லை

வேறு வழி இல்லை

பின்னர் இந்த வருட கடைசியில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இருவரும் தங்கள் திருமணத்தை அடுத்த வருடத்துக்குத் தள்ளி வைத்துள்ளனர். இதுபற்றி ரிச்சா கூறும்போது 'அனைவரின் பாதுகாப்பும் முக்கியம். அதனால் அதைத்தவிர வேறு வழி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X