கல்யாணம் முடிஞ்சு 3 மாசம் ஆயிடுச்சு.. நாங்க ஸ்கூல் க்ளாஸ்மேட்ஸ்.. தனுஷ் பட நடிகையின் விளக்கம்!
சென்னை: தனுஷ் பட நடிகை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து டிவிட்டரில் விளக்கமளித்திருக்கிறார்.
நடிகை ரிச்சா கங்கோபாத்யா தெலுங்கு படங்களின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடித்தார்.
தனுஷுடன் மயக்கம் என்ன படத்திலும் சிம்புவுடன் ஒஸ்தி என்ற படத்திலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு மட்டுமின்றி தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார் ரிச்சா.

திருமண போட்டோக்கள்
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ரிச்சா கங்கோபாத்யாவுக்கு ரகசிய திருமணம் நடந்தாகிவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் ரிச்சா திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்களும் வெளியானது.

கடைசியாக..
ரிச்சா கடைசியாக தெலுங்கில் பாய் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு சென்ற அவர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.

கிளாஸ்மேட்ஸ்
தற்போது ரகசிய திருமணம் குறித்த தகவலால் ஷாக்கான அவர் அதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. கல்யாணம் முடிந்த மூன்று மாதங்கள் முடிந்தது. நாங்கள் இருவரும் அமெரிக்காவில் கிரேட் ஸ்கூல் கிளாஸ்மேட்ஸ்.
ரகசிய திருமணம் இல்லை
எங்கள் இருவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சில செய்திகளில் குறிப்பிட்டது போல ரகசிய திருமணம் இல்லை. நான் திரையுலகை விட்டு 6 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் என் மேல் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்கள் மகிழ்ச்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











