அதிகாலையில் அதிர்ச்சி.. கார் மரத்தில் மோதி பயங்கர விபத்து.. பிரபல நடிகை படுகாயம்.. எலும்பு முறிவு!

By

பெங்களூரு: கார் விபத்தில் பிரபல நடிகையும் அவர் தோழியும் படுகாயம் அடைந்தனர்.

பிரபல கன்னட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவர் சில கன்னடப் படங்களை இயக்கி உள்ளார். இவர் மகள் ரோகினி சிங்.

சினிமாவில், ரிசிகா சிங் என்ற பெயரில் நடித்து வருகிறார். துனியா விஜய் ஜோடியாக கண்டீவீரா என்ற படத்தில் அறிமுகமானார்.

சுதீப் நடித்த மாணிக்யா

சுதீப் நடித்த மாணிக்யா

பிறகு ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் நடித்த கல்லா மல்லா சுல்லா, ரிஷி, காதல் சந்தியா நடித்த பெங்கி பிருகாலி, சுதீப் நடித்த மாணிக்யா உட்பட சில படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இன்னும் பிரபலமானார். இவர் தேவயானி என்ற படத்தை இயக்கி நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஷூட்டிங் தொடங்கிய நிலையில் அந்தப் படம் இன்னும் முடிக்கப்படவில்லை.

பார்ச்சுனர் கார்

பார்ச்சுனர் கார்

இவருக்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் சந்தீப் என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பிறகு இவர்கள் திருமணம் நிறுத்தப்பட்டது. இதற்கிடையே கன்னட நடிகர் ஜக் ஜக்தீஷின் இளைய மகளுக்குப் பிறந்த நாள். இதில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நடிகை ரிசிகா, முடித்துவிட்டு நேற்று அதிகாலை, பார்ச்சுனர் காரில் பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

கட்டுப்பாட்டை இழந்தது

கட்டுப்பாட்டை இழந்தது

காரில், நடிகர் ஜக் ஜக்தீஷின் மற்றொரு மகள் அர்பிதாவும் இருந்தார். காரை அவர்களின் ஃபிரண்ட் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். அதிகாலையில் எலஹங்கா - மாவல்லிபுரா சாலையில் வந்துகொண்டிருந்தபோது, வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து சாலையோரம் நின்றிருந்த மரத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் காரின் முன்பகுதி முழுவதுமாக சேதமடைந்தது.

எலும்பு முறிவு

எலும்பு முறிவு

இந்த விபத்தில் காரில் இருந்த நடிகை ரிசிகா சிங் உட்பட மூன்று பேருமே படுகாயம் அடைந்தனர். பின்னர், அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது, அவர்களின் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நடிகை ஷர்மிளா மந்த்ரே

நடிகை ஷர்மிளா மந்த்ரே

'பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் அவர்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும்' என்று நடிகை ரிசிகாவின் சகோதரர் நடிகர் ஆதித்யா தெரிவித்துள்ளார். ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் நடிகை ஷர்மிளா மந்த்ரே பெங்களூரில் நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் இன்னொரு நடிகை விபத்தில் சிக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X