ரஜினிசார் எப்போதும் வரமாட்டார்.. வேட்டையன் படம் முடிந்தபின்பும் விடாமல் தொடரும் ரித்திகா சிங்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கொடுக்கப்பட்டுள்ளன. ஆயினும் வேட்டையன் படம் திரையரங்குகளில் அதிகமான வசூலை பெற்று வருகிறது.

கடந்த இரு தினங்களில் படத்தின் வசூல் சிறப்பாக அமைந்துவரும் நிலையில், அடுத்தடுத்த விடுமுறை தினங்களில் இந்த படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. படத்தில் போலி என்கவுண்டருக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார் டிஜே ஞானவேல்.

rajinikanth vettaiyan movie rithika singh

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் ஏராளமான நட்சத்திர பட்டாளங்களை இணைத்துள்ளார் இயக்குனர் டிஜே ஞானவேல். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான இந்த படம் சிறப்பான வசூலை பெற்று வருகிறது. படத்தில் கொண்டாட பல விஷயங்களை இயக்குனர் இணைத்திருந்தார். அந்த வகையில் படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடித்திருந்த ரஜினிகாந்த் மற்றும் அவரது உயரதிகாரியாக நடித்திருந்த அமிதாப்பச்சனின் காம்பினேஷன் காட்சிகளை சிறப்பாக்கியிருந்தார். இந்த படத்தில் இவர்கள் இருவரும் மிக அதிகமாக ஸ்கோர் செய்துள்ளனர்.

வேட்டையன் படம்: படத்தில் ரஜினி மற்றும் அமிதாப்புடன் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், பகத் ஃபாசில், ரித்திகா சிங், ராணா உள்ளிட்ட மற்ற நடிகர்களும் மிகச்சிறப்பான கேரக்டர்களை பெற்றுள்ள நிலையில், படத்தில் ஏஎஸ்பி ரூபாவாக நடித்துள்ள ரித்திகா சிங் தன்னுடைய அழுத்தமான கேரக்டரை வேட்டையன் படத்தில் பதிவு செய்துள்ளார். இவரின் கேரக்டருக்கு அதிகமான ஸ்கோப் உள்ள நிலையில் அதை சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். வேட்டையன் படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே படத்தின் ஒவ்வொரு நடிகர் நடிகைகளும் தங்களின் அதிகமான நெகிழ்ச்சியை பதிவு செய்திருந்தனர்.

rajinikanth vettaiyan movie rithika singh


ரித்திகா சிங் பாராட்டு: இந்நிலையில் தற்போது படம் வெளியாகிய நிலையிலும் ரித்திகா சிங் படம் குறித்தும் ரஜினிகாந்த் குறித்தும் தன்னுடைய நெகிழ்ச்சியை தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினி சாருடன் ஒருவர் வாழ்க்கை குறித்த சரியான புரிதலை பெறலாம் என்று குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை நம்மீது எதை எறிந்தாலும் எப்போதும் அன்பாக இருக்க வேண்டும் என்ற முடிவை ரஜினியுடன் பழகுபவர்கள் எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ரஜினி கண்கள் மற்றும் புன்னகையால் பகிரும் அன்பு மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் ரித்திகா சிங் தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.


ஒரே தலைவர்தான்: கேமரா முன்பு இல்லாதபோது அவர் மிகவும் சில்லாக இருப்பதாகவும் ஆனால் ஆக்ஷன் என்று கூறியவுடன் அவர் மிகவும் புதிதாக மாறிவிடுவதாகவும் ரித்திகா மேலும் பாராட்டியுள்ளார். அந்த நபரைத்தான் நாம் நேசிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இந்த பிரபஞ்சம் புதிதாக மாறினாலும் நடிகர் ரஜினிகாந்த் போன்ற லெஜெண்ட்ரி மனிதர் மீண்டும் பிறக்க மாட்டார் என்றும். அவர் மட்டுமே ஒரே தலைவர் என்றும் அவருக்கு மாற்று இல்லை என்றும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் ரித்திகா சிங் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X