அசோக் செல்வனின் 'ஓ மை கடவுளே' படத்தில் லிப் லாக் இருக்கா, இல்லையா? ஹீரோயின் ரித்திகா சிங் வெட்கம்

By

சென்னை: ஓ மை கடவுளே படத்தில் நடிகை ரித்திகா சிங் முதன்முறையாக லிப் லாக் காட்சியில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அசோக் செல்வன், ரித்திகா சிங் ஜோடியாக நடித்துள்ள படம், ஓ மை கடவுளே. வாணி போஜன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், ஷா ரா உட்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

காதலர் தினத்தில்

காதலர் தினத்தில்

அஷ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, லியான் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். விது அயன்னா ஒளிப்பதிவு செய்துள்ளார். அக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிப்பாளர் டில்லிபாபு, ஹேப்பி ஹை பிக்சர்ஸ் அபிநயா செல்வத்துடன் இணைந்து தயாரித்துள்ளார். சக்தி பிலிம் ஃபேக்டரி படத்தை வெளியிடுகிறது. வரும் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.

கடவுள் விஜய் சேதுபதி

கடவுள் விஜய் சேதுபதி

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கடவுளாக நடிக்கிறார். அவரை கடவுளாக நடிக்க வைத்தது ஏன் என்று படத்தின் ஹீரோ அசோக் செல்வன் கூறும்போது, அவர் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். அப்படி ஒரு இமேஜ் அவருக்கு இருக்கிறது. அதனால் அவரை கடவுளாக நடிக்க கேட்டோம். அவரும் சம்மதித்தார். அவருக்கு உதவியாளராக ரமேஷ் திலக் நடித்துள்ளார்' என்றார்.

ரித்திகா சிங்

ரித்திகா சிங்

இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துள்ளது பற்றி நடிகை ரித்திகா சிங் கூறும்போது, இறுதிச் சுற்று படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. அடுத்து ஆண்டவன் கட்டளை படத்தில் நடித்தேன். இதுவும் கவனிக்கப்பட்டது. பிறகு சிவலிங்காவில் நடித்தேன். சிறிது இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளேன்.

லிப் லாக் காட்சி

லிப் லாக் காட்சி

இது மார்டன் கதை. இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும். அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்துள்ளேன். எங்கள் இருவருக்குமான காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். தொடர்ந்து நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்று காத்திருக்கிறேன் என்றார்.
இந்தப் படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருப்பதாகக் கூறப்பட்டது. இதுபற்றி கேட்டபோது வெட்கப்பட்ட ரித்திகா, அப்படித்தான்னு வச்சுக்கோங்களேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X