ரித்விகாவுக்கு அடித்த யோகத்தை பாருங்களேன்... தானாக தேடி வந்த 'சிஎம்' நாற்காலி!

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது மனைவி ஜானகி வேடத்தில் நடிகை ரித்விகா நடிக்க உள்ளார்.

சென்னை: எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவரது மனைவி ஜானகி வேடத்தில் நடிகை ரித்விகா நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை " எம்.ஜி.ஆர் " என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம்.

Actress Rithvika to play MGR wife Janaki

ஆனையடி பள்ளியில் படித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்யகால வேடத்தில் நடிக்கிறான்.

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், டைரக்டர் பந்துளுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடிக்கின்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விரைவில் துவங்க இருக்கும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி வேடத்தில் நடிகை ரித்விகா நடிக்க இருக்கிறார். எம்.ஜி.ஆர்.மறைவிற்கு பிறகு சிறிது காலம் முதலமைச்சராக இருந்தார் ஜானகி என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X