சட்டையை தூக்கி சிக்ஸ் பேக்கை காட்டிய ரித்திகா சிங்.. நடிகர்கள் கூட இவ்வளவு ஃபிட்டா இல்லையே!

சென்னை: நடிகை ரித்திகா சிங், நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் சிக்ஸ் பேக்கை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

ஏய்...சண்டக்காரா குண்டு முழியில...ரெண்டு உயிரத் தேடிப்பாயுது...என பாட்டுப்பாடி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ரித்திகா சிங்.

actress ritika singh six pack photos trending on internet

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் சுதா கொங்கரா இயக்கிய இறுதி சுற்று குத்துச்சண்டை வீராங்கனியாகவே நடித்திருந்தார்.

ரித்திகா சிங்: சுருட்டை முடியுடன், அழகான ரொமான்சுடன் முதல் படமான இறுதிச்சுற்றில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார். அந்த படத்தில் நடிகர் மாதவனுடன் ஜோடி போட்டு நடித்து ஸ்கோரை அள்ளினார் ரித்திகா சிங். குத்துச்சண்டை வீராங்கனியாக இருந்த போதும், எனக்கு பாக்ஸிங் மட்டும் இல்லை, நடிப்பும் வரும் என்பதை நிரூபித்தார். இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட்டடித்து வசூலை அள்ளியது.

actress ritika singh six pack photos trending on internet

க்யூட்டான நடிப்பு: முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதன்பின், ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா திரைப்படத்திலும் பேயாக நடித்திருந்தார். அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் க்யூட்டான தோழியாக நடித்திருந்தார். பாக்ஸர், பிச்சைக்காரன் 2,வணங்கான்,கொலை போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

actress ritika singh six pack photos trending on internet

சிக்ஸ் பேக்: இணையத்தில் படுஆக்டிவாக இருக்கும் ரித்திகா சிங், குட்டி டவுடர் போட்டுக்கொண்டு கண்ணாடி முன் நின்று கொண்டு, சட்டையை தூக்கி தனது சிக்ஸ் பேக் தெரியும்படி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர், ஆத்தாடி என்ன உடம்பு என பாட்டுப்பாடி வர்ணித்து வருகிறார். இணையத்தில், இந்த போட்டோவை அப்லோடு செய்த சிறிது நேரத்திலேயே பல லட்சம் லைக்குகளை பெற்று வருகின்றனர்.

actress ritika singh six pack photos trending on internet

தலைவர் 170: நடிகை ரித்திகா சிங், ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள தலைவர் 170 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மலையாள நடிகர்கள் மஞ்சு வாரியர் மற்றும் பகத் பாசில், டோலிவுட் நடிகர் ராணா டகுபதி மற்றும் கோலிவுட்டின் இளம் நடிகை துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X