சாக்‌ஷி மாலிக்கை பார்க்கையில் இதயம் நொறுங்கியது.. நடிகை ரித்திகா சிங் வேதனை!

சென்னை: சாக்‌ஷி மாலிக்கைப் போன்ற வீராங்கனையை இப்படி பார்க்கையில் இதயம் நொறுங்கி விட்டது என்று நடிகை ரித்திகா சிங் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகாரை கூறி, 40 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து, பிரிஜ் பூஷன் சிங் இனி மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டதை எடுத்து அவரின் விசுவாசி மற்றும் நண்பருமான சஞ்சய் குமார் தேர்தலில் நின்றார்.

Actress Ritika singh support on Wrestler sakshi malik

மல்யுத்த வீராங்கனை: சாக்சி மாலிக் உள்ளிட்ட வீராங்கனைகள் மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை சந்தித்து சஞ்சய் குமார் தேர்தலில் நிற்கக் கூடாது என்று அறிவுறுத்தினார். இதை அடுத்து இன்று தேர்தல் முடிவு வெளியானது. மொத்தம் 15 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் சஞ்சய் சிங் அணியினர் 13 பேர் வெற்றி பெற்றனர். இது மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உள்ளிட்டோருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: இதனால் மனமுடைந்த சாக்சி மாலிக் செய்தியாளர்களை சந்தித்தார். 40 நாட்களாக நாங்கள் சாலையில் படுத்து தூங்கினோம். எங்களுடைய போராட்டத்திற்கு பல மக்களும் ஆதரவு தெரிவித்தார்கள். அவர்களுக்கு எங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரிஜ் பூஷன் சிங்கின் நண்பர் தற்போது இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பது, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இதனால், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வெளியிட்டபோது கண் கலங்கிய சாக்‌ஷி மாலிக் தன்னுடைய காலணியை எடுத்து மேஜை மேல் எடுத்து வைத்தார். இது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

இதயம் நொறுங்கி விட்டது: இது தொடர்பாக, நடிகை ரித்திகா சிங் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். அதில், சாக்‌ஷி மாலிக் போன்ற வீராங்கனையை இந்த நிலைமையில் பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஒருவர் தனது கனவுகளையும், நம்பிக்கையையும் இத்தனை ஆண்டு கால கடின உழைப்பையும் கைவிட்டு, 'நான் விலகுகிறேன்' என சொல்வது மோசமான நிலை. போராட்டத்தின்போது அவரை அவமதித்தார்கள், இப்போது இப்படியொரு நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். இது கொடுமையானது என பதிவிட்டுள்ளார்.

நடிகை ரித்திகா சிங்: ஒரு குத்துச்சண்டை வீராங்கனையான நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று திரைப்படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படம் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதையடுத்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். ஓ மை கடவுளே படத்தில் ரித்திகா நடித்த அனு என்ற கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

தற்போது இவர், அருண்விஜய் நடிக்கும் பாக்ஸர், அரவிந்தசாமி நடிக்கும் வணங்காமுடி உள்ளிட்ட படங்களில் நடித்துத் வருகிறார். இவர் மீது ரசிகர்கர் ளுக்கு ஒரு செல்ல குற்றச்சாட்டு இருக்கிறது. அதாவது இவர் எப்போதும் கவர்ச்சி காட்டாமல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X