பிகினியில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த ரிது வர்மா.. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : தமிழ் திரைத்துறைக்கு புதுவரவான ரிது வர்மா பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழில் இவர் வேலையில்லா பட்டதாரி2, கண்ணும்கண்ணும் கொள்ளையடித்தால் என இரண்டே இரண்டு படங்கள் தான் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
சமூகவலை தளத்தில் இவர் பதிவிட்டுள்ள பிகினி போஸ் பல லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.

நந்தி விருது
ரிது வர்மா 'அணுகொகுண்டா' என்ற தெலுங்கு குறும்படத்திலிருந்து தனது திரைப்பயணத்தை தொடங்கினார். இந்த குறும்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று இவருக்கு படவாய்ப்புகள் வந்தன. பெல்லி சூபுலு திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவருக்கு நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. இதைத்தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி 2படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார்.

பாராட்டை பெற்றார்
துல்கர் சல்மான், ரட்சன் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் கேடி ராணியாக நடித்து அடேங்கப்பா, ஜித்து ஜில்லாடி தான் இந்த பொண்ணு என்று அனைவரையும் ஒரு நிமிடம் விழி பிதுங்க வைத்தார் ரிது. இந்த திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

பல படங்கள் கைவசம்
இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இவர், கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும், சைனா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் நானியுடன் தெலுங்கில் ' ட்ரக் ஜெகதீஸ்' திரைப்படத்திலும், 'வருடு காவலேனு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வைரல் புகைப்படம்
பல படங்களை கைவசம் வைத்து இருக்கும் ரிது வர்மா, முதன்முறையாக நீச்சல் குளத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். ஊரடங்கால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால். வீட்டிலேயே இருக்கும் ரிது சமூக வலைதளங்களில் அவ்வவ்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











