அடுத்தடுத்து குவியும் வாய்ப்பு... பிரபல நடிகருடன் ஜோடி போடும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நாயகி!

சென்னை: நடிகை ரிது வர்மா முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ரிது வர்மா. தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரிது வர்மா.

ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ள ரிது வர்மா, தமிழில் வேலையில்லா பட்டதாரி 2 படத்தின் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் ரிது வர்மா.

பிளாக் பஸ்டர் ஹிட்டானது..

பிளாக் பஸ்டர் ஹிட்டானது..

தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்தார். இந்தப் படத்தில் முதல் முறையாக லீடிங் ரோலில் நடித்தார் ரிது வர்மா. இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார் ரிது வர்மா.

துருவ நட்சத்திரம் படத்திலும்..

துருவ நட்சத்திரம் படத்திலும்..

தற்போது புத்தம் புது காலை படத்தில் நடித்த ரிது வர்மா, கவுதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் படத்திலும் நடித்து வருகிறார். இதேபோல் ஒக்கே ஒக்க ஜீவீதம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் ரிது வர்மா. தெலுங்கு மற்றும் தமிழில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள ரிது வர்மா, தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனுடன்..

சிவகார்த்திகேயனுடன்..

அதாவது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் கடைசியாக டாக்டர் படம் வெளியானது. இந்தப் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ளது,. மேலும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதனை தொடர்ந்து டான் மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன்.

முதல் முறையாக தெலுங்கு படத்தில்..

முதல் முறையாக தெலுங்கு படத்தில்..

இந்த படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. அதோடு அனுதீப் இயக்கத்தில் முதல் முறையாக தெலுங்கு படத்திலும், தமிழில் சிங்கப்பாதை படத்திலும் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் ராட்சசன் படத்தின் இயக்குநரான ராம் குமார் இயக்கத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X