ஐஸ்கட்டிகளுக்கு நடுவே ஜில்லுன்னு ஒரு க்யூட் கிளிக்.. நடிகை ரிது வர்மா!

சென்னை : தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 சிறப்பு தோற்றத்தில் தோன்றியவர் நடிகை ரிது வர்மா

கடந்த ஆண்டு தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் இப்படி ஒரு பெண்ணா என வியக்கும் அளவிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வரும் கணம் என்ற படத்தில் நடித்து வரும் ரிது வர்மா ஐஸ்கட்டிகளுக்கு நடுவே ஜில்லுன்னு கிளிக்கிய க்யூட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்

 பிளாக்பஸ்டர் வெற்றி

பிளாக்பஸ்டர் வெற்றி

தெலுங்கு சினிமாவில் அறிமுகத்தை கொடுத்து இப்பொழுது தமிழிலும் கால்தடத்தை வெற்றிகரமாக பதித்து வரும் நடிகை ரிது வர்மா மிக விரைவிலேயே தமிழிலும் முன்னணி இடத்தைப் பிடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பெல்லி சூபுளு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்ட இவர் தமிழ் சினிமாவில் முதல்முறையாக தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2ல் நடித்தார். வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்க வில்லை என்றாலும் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற இவர் இப்பொழுது தமிழில் அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

 இப்படி ஒரு பெண்ணா

இப்படி ஒரு பெண்ணா

கடந்த ஆண்டு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி திரையரங்குகளில் சக்கை போடு போட்ட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் ரிது வர்மாவின் அட்டகாசமான நடிப்பை பார்த்து பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான்,ரக்ஷன்,நிரஞ்சனா அகத்தியன்,கௌதம் வாசுதேவ் மேனன்,ரிது வர்மா ஆகியோர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவத்தை கொடுத்தது. அதில் இப்படி ஒரு பெண்ணா என வியக்கும் அளவிற்கு அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

 இரு மொழிகளிலும்

இரு மொழிகளிலும்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தாமதமாகி கொண்டுள்ளது இந்த நிலையில் தமிழில் சில திரைப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அந்த வகையில் அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் தற்போது தயாராகி வரும் கணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக சர்வானந்த் நடித்துள்ளார். 90களின் கனவுக்கன்னி அமலா இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து மீண்டும் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

 ஜில்லுன்னு க்யூட் போஸ்

ஜில்லுன்னு க்யூட் போஸ்

இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து கவர்ச்சிக்கு முற்றிலும் முட்டுக்கட்டை போட்டு வரும் ரிது வர்மா ஐஸ் கட்டிகளுக்கு நடுவே க்யூட்டாக நின்றுகொண்டு ஜில்லுன்னு போஸ் கொடுத்த அழகிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X