அச்சச்சோ.. இப்படியெல்லாமா டிரெஸ் போடுவாங்க? பிரபல தாராள ஹீரோயினை தறிகெட்டு வர்ணிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை வெளியிட்டுள்ள ஹாட் போட்டோவை ரசிகர்கள் கண்டபடி வர்ணித்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகை மூன் மூன் சென்-னின் இளைய மகள், பிரபல நடிகை ரியா சென்.
மூன் மூன் சென், தமிழில் 12 பி படத்தில் ஜோதிகாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார்.

அக்னிச் சிறகுகள்
ரியா சென்னும் அவரது சகோதரி ரைமா சென்னும் இந்தி நடிகைகள். இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். வங்க மொழி படங்களிலும் நடித்து வருகின்றனர். ரைமா சென் தமிழில், விஜய் ஆண்டனி, அருண் விஜய் நடிக்கும் 'அக்னிச் சிறகுகள்' படத்தில் நடித்து வருகிறார். இருவரும் அடிக்கடி ஹாட் போட்டோஷூட் நடத்தி அதை தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு பரபரப்பைக் கிளப்புவது வழக்கம்.

கிளாமர் போட்டோ
இந்தப் புகைப்படங்களை ரசிக்கத் தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. அவர்களின் கிளாமர் ஸ்டில்களை பார்ப்பதற்காகவே இவர்கள் பக்கங்களை தேடி வருபவர்கள் அதிகம். இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீடுகளில் இருக்கும் நடிகர், நடிகைகள் தங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை ஒரு கடமை போல செய்து வருகின்றனர்.

ஹாட் புகைப்படம்
எப்போது இன்ஸ்டாவில் போட்டோ பதிவிட்டு வந்தவர்கள், இப்போது தினம் ஒன்று அல்லது இரண்டு நாளுக்கு ஒன்று என்று போட்டோக்களை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, நடிகை ரியாசென், தற்போது வெளியிட்டுள்ள ஹாட் போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர்.

காதல் மொழி
செம கிக்காக போஸ் கொடுத்திருக்கும் ரியா சென் சட்டையில் பட்டனை போடாமல், ஒவர் கவர்ச்சியாக இருக்கிறார். இந்தப் புகைப்படத்துக்கு, ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சிலர் தாராளமாகக் காதல் மொழி பேசியுள்ளனர். நீயில்லாமல் நானில்லை என்கிற ரேஞ்சுக்கு பல ரசிகர்கள் கவிதையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படியெல்லமா?
ஒருவர், 10 வருஷத்துக்கு முன்னால எப்படி இருந்தீங்களோ, அப்படியே இருக்கீங்களே எப்படி? என்று கேட்டுள்ளார். 'எங்களுக்கு கடவுள் கொடுத்த கிப்ட் நீங்க.. உங்க அழகுக்கு முன் எதுவுமே நிகரில்லை' என்று தெரிவித்துள்ளார் ஒருவர். சிலர் அச்சச்சோ..இப்படியெல்லமா போட்டோ போடுவீங்க, கொடுமை என்று கண்டபடி திட்டியுள்ளனர். இன்னும் சிலர் ரியாவை வர்ணித்து, இந்தியில் கவிதை எழுதியுள்ளனர்.
Recommended Video

தாஜ்மஹால்
நடிகை ரியா சென், தமிழில் பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அர்ஜூன் நடித்த அரசாட்சி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் வரவில்லை. இந்தியில் கவனம் செலுத்தினர். அங்கு சில் சிலாய், ஹேய் பேபி, லவ் கிச்சடி, பேயிங் கெஸ்ட்ஸ், ஜிந்தகி 50-50 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











