குப்புறப்படுத்து..முதுகு தெரிய செம போஸ்..இளசுகளை சூடேற்றும் பிரபல நடிகை !
மும்பை : சரத்குமார், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ரியா சென் இப்பொழுது படுக்கை அறையில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி உள்ளார்.
தாஜ்மஹால், குட்லாக், அரசாட்சி என தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்த இவர் இப்பொழுது ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
சமீபகாலமாகவே சோசியல் மீடியாக்களில் தனது அங்கங்கள் தெரிகின்றவாறு படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரியா சென் இப்பொழுது படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் குப்புன்னு வியர்க்க வைத்துள்ளார்.

பாரதிராஜா இயக்கத்தில்
மயக்கும் கண்களால் ரசிகர்களை கட்டி இழுத்து தனது கவர்ச்சி கலந்த நடிப்பின் மூலம் திரையுலகை பல ஆண்டுகளாக ஆண்டு வரும் நடிகை ரியா சென் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதைத் தொடர்ந்து இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அவரது மகன் மனோஜ் கதாநாயகனாக அறிமுகமான "தாஜ் மஹால்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டார்.

சுமாரான வெற்றி
ஏ.ஆர் ரகுமான் இசையில் தாஜ்மஹால் படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் வெற்றியடைந்த நிலையில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் இருந்தது. மனோஜ் மற்றும் ரியா சென் என இருவருக்கும் அறிமுகப்படமாக அமைந்த தாஜ்மஹால் சுமாரான வெற்றியையே பெற்றது.

வாய்ப்புகள் கிடைக்காததால்
தாஜ்மஹால் திரைப்படத்தில் ரியா செனின் நடிப்பு மிக பிரபலமாக பேசப்பட்ட நிலையில் தனது அடுத்த திரைப்படத்திலேயே டாப் ஸ்டார் பிரசாந்த் உடன் இணைந்து கலக்கினார். இவ்வாறு தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து வந்த ரியா சென் தமிழில் ஒரு சுற்று வருவார் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால் ஹிந்தி, பெங்காலி மொழிகளில் நடிக்க சென்றுவிட்டார்.

தமிழ் சினிமாவிற்கு முழுக்கு
நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் உடன் அரசாட்சி திரைப்படத்தில் நடித்த இவர் அதில் ரசிகர்களை பெரிதாக ஈர்க்காததால் தமிழ் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு வட இந்தியாவுக்கே மீண்டும் திரும்பி சென்று விட்டார்.

ரசிகர்களை குளிர்ச்சிப்படுத்தி
இந்நிலையில்,சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் சோசியல் மீடியாக்களில் சர்ச்சைக்குரிய பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குளிர்ச்சிப்படுத்தி வருவதோடு அவை வைரலாகியும் வருகின்றன.

கட்டுக்கடங்காத
இந்நிலையில் இப்பொழுது படுக்கையறையில் குப்புற படுத்தவாறு மயக்கும் மந்திர பார்வையின் மூலம் பார்க்கும் அனைவரையும் மயக்குகின்றவாறு பார்வை பார்த்து அனைவரையும் குப்புன்னு வியக்க வைக்கும் இந்த கட்டுக்கடங்காத படுக்கையறை கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











