கவர்ச்சி காட்டிய ரித்விகா.. ச்ச நீங்களுமா என..வருத்தப்பட்ட ரசிகர்கள் !

சென்னை : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரித்விகா தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும் சவாலான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.

மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி என இவர் நடித்த திரைப்படங்கள் மக்களிடையே இவரை பிரபலமாக பேச வைத்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமாகி வெற்றியும் பெற்றார்.

இந்த நிலையில் இதுவரை குடும்பப்பாங்கான பெண்ணாக அடக்க ஒடுக்கமான உடையை மட்டுமே அணிந்து கவர்ச்சி எதுவும் காட்டாமல் இருந்த ரித்விகா இப்பொழுது படு கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

பிரபலமான நடிகை

பிரபலமான நடிகை

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பதித்து வரும் நடிகை ரித்விகா தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பெயரையும் புகழையும்

பெயரையும் புகழையும்

இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான "மெட்ராஸ்" திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது.

முக்கியமான கதாபாத்திரத்தில்

முக்கியமான கதாபாத்திரத்தில்

வட சென்னையில் வாழும் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்த நிலையில் இதில் ரித்விகா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பார்.

பிக்பாஸில் கலந்து

பிக்பாஸில் கலந்து

மெட்ராஸ் படம் இவருக்கு கொடுத்த மிகப்பெரிய அறிமுகத்தைத் தொடர்ந்து ஒரு நாள் கூத்து, கபாலி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட திரைப்படங்களில் அடுத்தடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வர இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

வெற்றியாளராக மகுடம்

வெற்றியாளராக மகுடம்

அவ்வாறு 2018 ஆம் ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக விளையாடிதோடு பல கோடி மக்களின் இதயங்களை வென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக மகுடம் சூடினார்.

ரசிகர்களை கவர்ந்து

ரசிகர்களை கவர்ந்து

தான் நடிக்கும் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்துக் குடும்பங்களுக்கும் மிகவும் பரிச்சயமானார்.

போட்டோ ஷூட்

போட்டோ ஷூட்

இந்நிலையில் இப்போது எம் ஜி ஆர், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபகாலமாகவே பல்வேறு போட்டோ ஷூட்களை எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாகி வருகிறார்.

Recommended Video

ACTRESS RIYTHVIKA INTERVIEW | GUNDU MOVIE | FILMIBEAT TAMIL
இப்படி மாறிட்டீங்க

இப்படி மாறிட்டீங்க

எனினும் இவர் இதுவரை எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் கவர்ச்சி காட்டாத வகையில் இருந்து வந்த நிலையில் ரசிகர்கள் பலரும் அதை ரசித்து வந்ததை தொடர்ந்து இப்பொழுது வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களில் கவர்ச்சி காட்டியவாறு இருக்க ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ள நிலையில், இதை பலர் வரவேற்றாலும் இவரின் தீவிர ரசிகர்கள் சிலர் "நீங்களும் கடைசியா இப்படி மாறிட்டீங்க, இதை நாங்க உங்க கிட்ட இருந்து கொஞ்ச கூட எதிர்ப்பார்க்கல" என செல்லமாக கோபித்தவாறு தங்களது லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் இதற்கு குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X