அதைக் கொஞ்சம் இழுத்து மூடலாமே.. ரித்விகாவுக்கு.. ரசிகர்கள் செல்ல அட்வைஸ்!
சென்னை : தமிழில் பரதேசி, மெட்ராஸ், ஒரு நாள் கூத்து, கபாலி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரித்விகா.
இவர் விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக இல்லத்தரசிகளின் மனங்களை வென்றார் ரித்விகா.

தில்லா நடித்தார்
டார்ச் லைட் என்ற படத்தில் முன்னணி நடிகைகளே நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். இப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும் இந்த கதாபாத்திரத்தை ஏற்று, தில்லாக நடித்த இவரை அனைவரும் பாராட்டினர்

கைவசம் 3 படங்கள்
அதன் பிறகு இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்படத்தில் சமூக ஆர்வலராக, தோழரே தோழரே என்று கூறி அந்த கதாபாத்திரத்திற்கு இவர் கச்சிதமாக பொருந்தி இருந்தார். அந்த படம் வெற்றி பெற்று இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்து. வால்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்த ரித்விகா தற்போது கைவசம் 3 படங்களை வைத்திருக்கிறார்.

ஏராளமான ரசிகர்கள்
சமூக வலைத்தளங்களில் ரித்விகா எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார். தன்னுடைய புகைப்படங்கள் பலவற்றையும் தொடர்ந்து அவர் பதிவிட்டு வருகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மாராப்பை விலக்கி
பிக் பாஸ் இல்லத்தில் குடும்ப குத்துவிளக்காக வந்த ரித்விகா, சமீப காலமாக கவர்ச்சி காட்டத் தொடங்கி உள்ளார். தற்போது, இவர் பதிவிட்டு இருந்த ஒரு புகைப்படத்தில் மாராப்பை விலக்கி விட்டு இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு லைக்குகள் குவிந்தாலும்.இதை உங்க கிட்ட இதை எதிர்பார்க்கல ரித்விகா என்றும், மாராப்பை கொஞ்சம் இழுத்து மூடு ரித்விகா என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











