தலித்தாக பிறக்காமல் போனதற்காக வருத்தப்படுகிறேன்.. ஜாதி குறித்து பேசிய நபருக்கு நடிகை நெத்தியடி!
சென்னை: ஜாதி குறித்து பேசிய நெட்டிசனுக்கு நடிகை ரித்விகா நச் பதிலடி கொடுத்துள்ளார்.
Recommended Video
இயக்குநர் பாலாவின் பரதேசி படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ரித்விகா. பரதேசி படத்தில் கருத்தக்கன்னி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
இதனை தொடர்ந்து நினைத்தது யாரோ என்ற படத்தில் நடித்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக மிரட்டியிருப்பார்.

பல படங்கள்
தொடர்ந்து அழகு குட்டி செல்லம், ஒரு நாள் கூத்து, கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச் லைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வால்டர் படம் வெளியானது.

நிச்சயம் ஒரு கேரக்டர்
இயக்குநர் பா ரஞ்சித்தின் படங்களில் நிச்சயம் இவருக்கு ஒரு கேரக்டர் இருந்து விடும். தற்போது எம்ஜிஆர், மாடு, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை ரித்விகா.

டைட்டில் வின்னர்
விஜய்டி டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார் ரித்திவிகா. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக பங்கேற்றார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரித்விகா அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

விமர்சனங்கள் புதிதல்ல
இந்நிலையில் அவரது போட்டோ ஒன்றை பார்த்த நெட்டிசன், ஜாதி ஒன்றை குறிப்பிட்டு பருவத்துல பன்னி கூட அழகாதான் இருக்கு என கமெண்ட் பதிவிட்டிருந்ததார். அதனை பார்த்த நடிகை ரித்விகா, இது போன்று எனக்கு வரும் விமர்சனங்கள் புதிதல்ல. இதற்கும் இனி வருமின் அதற்கான பதிலாகவும்... என ஒரு பதிவை ஷேர் செய்திருக்கிறார்.

ஆதிக்க சாதியை சேர்ந்தவள்
அதில் தலித்தாக இருப்பின் மிக்க மகிழ்ச்சி அடைந்திருப்பேன். என்ன செய்ய? அப்பாக்கியம் நானடையேன். நானும் அடக்குமுறைகள் செய்த குற்றமிகு ஆதிக்க சாதிகளுள் பிறந்தவள்தான். வருந்துகிறேன். இனியாவது சாதிகளற்ற சமூகமாக மனிதர்களாக வாழ முயற்சிப்போம்.

அவர்கள் என்னைவிட அழகு
நிற்க. ஒரு வகையில் நானும் தலித்தான். ஒடுக்கப்பட்டோர் அனைவரும் தலித் எனின் பெண்ணாகிய நானும் தலித் தானே. காலங்காலமாக ஆண்களால் ஒடுக்கப்பட்டோர் தானே. ஆம் தலித். எம்மை தலித்தாக்கிய பிழையும் பாவமும் தங்கள் ஆணினத்தையே சாரும். மற்றபடி எம் அழகை பாராட்டியதற்கு நன்றி.
பி.கு: தலித் பெண்கள் என்னை விட அழகு.. இவ்வாறு நடிகை ரித்விகா தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











