திருமணமான பிரபல நடிகர் மீது எனக்கு க்ரஷ்.. ரித்திகாவின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!
Recommended Video
சென்னை: நடிகை ரித்விகா திருமணமான பிரபல நடிகர் மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறியது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
நடிகைகள் பட வாய்ப்புகளுக்காகவும் விளம்பரத்துக்காகவும் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகைகளின் இந்த போட்டோக்கள் வைரலாவதும், நடிகைகளின் போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் ஜொள்ளுவிடுவதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களக நடிகைகள் நடிகர்கள் மீதான தங்களின் க்ரஷை சொல்வதும், டேட்டிங் செல்ல விருப்பம் தெரிவிப்பதும் அதிகரித்து வருகிறார்.

ரைஸா டேட்டிங்
நடிகை சாய் தன்ஷிகா நடிகர் சிம்பு மீது தனக்கு க்ரஷ் இருப்பதாக கூறினார். அவரை தொடர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை ரைஸா வில்சன், நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல போவதாக கூறினார்.

ரசிகர்கள் ஷாக்
இதனால் நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார். இந்நிலையில் நடிகை ரித்விகா, ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கும் பதிலை கேட்டு ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

நல்ல வரவேற்பு
நடிகை ரித்விகா, "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்திருந்தார். கடந்த வாரம் வெளியான அந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அந்த நடிகர் க்ரஷ்
இந்த படத்தின் புரமோஷனுக்காக பேட்டி கொடுத்திருந்த ரித்விகாவுடன் தமிழ் சினிமாவில் உங்களுக்கு யார் மேலாவது க்ரஷ் ஏற்பட்டுள்ளதா என கேட்டதற்கு, உடனே ஆம், விஜய் சேதுபதி மீது எனக்கு க்ரஷ் உள்ளது என்றார்.

ஓபனாக பேசும் நடிகைகள்
மேலும், நடிகர் ஜெய்சங்கர் மீதும் கிரஷ் இருந்தது என்று சிரித்துக் கொண்டே கூறினார். இதனைக் கேட்ட ரசிகர்கள் என்ன.. நடிகைகள் எல்லாம் இப்படி ஓபனாக பேச ஆரம்பித்துவிட்டார்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டைட்டில் வின்னர்
நடிகை ரித்விகா, மெட்ராஸ், கபாலி, இருமுகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











