Just In
- 52 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 1 hr ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Sports
நம்பர் 1 டீமை வீழ்த்துமா சென்னை? வாய்ப்பே இல்லை.. அடித்து சொல்லும் விமர்சகர்கள்!
- Finance
'மேட் இன் அமெரிக்கா' ஜோ பிடன் கையெழுத்திடும் புதிய உத்தரவு..!
- News
தமிழகத்தில் மேலும் 540 பேருக்கு கொரோனா தொற்று- 4 பேர் உயிரிழப்பு
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்த விஷயத்துக்கு இவ்ளோ கோவமா.. நெட்டிசனுக்கு நடு விரலை காண்பித்து பச்சையாக திட்டிய நடிகை ரித்விகா!
சென்னை: தனது போட்டோவை பார்த்து கமென்ட் பதிவிட்ட நெட்டிசனை திட்டியதோடு பச்சையாக நடுவிரலை காண்பித்த நடிகை ரித்விகாவின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் பாலாவின் பரதேசி படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ரித்விகா. பரதேசி படத்தில் கருத்தக்கன்னி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து நினைத்தது யாரோ என்ற படத்தில் நடித்தார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் மேரி என்ற படத்தில் நடித்த ரித்திவிகா, அப்படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ரொமான்ஸ் கதறல் என கலக்கியிருப்பபார்.
|
வேறு மொழியில்லை
தொடர்ந்து அழகு குட்டி செல்லம், ஒரு நாள் கூத்து, கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஓநாய்கள் ஜாக்கிரதை, டார்ச் லைட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு படத்தில் நடித்துள்ளார். இதுவரை தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழி படத்திலும் நடிக்கவில்லை.
நிச்சயம் ஒரு கேரக்டர்
வழக்கமாக இயக்குநர் பா ரஞ்சித்தின் படங்களில் நிச்சயம் இவருக்கு ஒரு கேரக்டர் இருந்து விடும். கடைசியாக பா ரஞ்சித் தயாரிப்பில் வெளியான இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் போராளியாக நடித்திருந்தார். தற்போது எம்ஜிஆர், மாடு, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, வால்டர், யாதும் ஊரே யாவரும் கேளீர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
|
டைட்டில் வின்னர்
விஜய்டி டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆனார் ரித்திவிகா. இதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கெஸ்ட்டாக பங்கேற்றார் ரித்விகா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ரித்விகா அவ்வப்போது தனது போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். கடந்த சில மாதங்களாக போட்டோக்களில் கிளாமர் காட்டி வருகிறார் ரித்விகா.
|
நடுவிரலை காட்டிய நடிகை
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஷர்ட் அணிந்திருக்கும் ஒரு கறுப்பு வெள்ளை போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ரித்விகா. இதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், அய்யோ பாவம், பட வாய்ப்பு இல்லாம வெட்டியா இருக்காங்க என கமென்ட் பதிவிட்டார். அதனை பார்த்து செம உஷ்ணமான ரித்விகா, மூடிட்டு போடா என திட்டியதோடு, நடுவிரலையும் காண்பித்துள்ளார்.

காய்ச்சும் நெட்டிசன்ஸ்
அவரது இந்த ஆன்ட்டி ரியாக்ஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசனின் அந்த கமென்ட்டுக்கு அந்த அளவுக்கு ரித்விகா கோபப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த சின்ன விஷயத்திற்கு இவ்வளவு கோபப்பட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். ரித்விகாவின் இந்த பதிலை பார்த்த நெட்டிசன்கள் அவரை காய்ச்சி எடுத்து வருகின்றனர்.

ஏன் இவ்வளவு கோபம்?
ரித்விகாவின் பதிலை பார்த்த இந்த நெட்டிசன், பிக்பாஸ்ல ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்தீங்க.. இப்போ இப்படி இறங்கிட்டீங்க.. அப்போ அதெல்லாம் பொய்யா என்றும் கேட்டு வருகின்றனர். இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க என்றும் சில நெட்டிசன்கள் கேட்டுள்ளனர். அதே நேரத்தில் சிலர் ரித்விகாவுக்கு ஆதரவாகவும் கமென்ட் பதிவிட்டுள்ளனர்.