கேரள வெள்ளம்.. நடிகை ரோகினி நிதியுதவி.. 'அம்மா' வுக்கு இது எவ்வளவோ பரவாயில்ல!!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை ரோகினி 2 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு நடிகை ரோகினி 2 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கேரளாவில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
ஆங்காங்கே ஏற்பட்ட மண்சரிவால் ஏராளமான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

49 பேர் பலி
கனமழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 49 பேர் பலியாகியுள்ளனர். பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலர் நிதியுதவி
லட்சக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் சின்னாபின்னமாகியுள்ள கேரளாவுக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

தென்னிந்திய நடிகர் சங்கம்
வெள்ள பாதிப்புக்களில் சிக்கியவர்களுக்கு உதவுவதற்காக கோலிவுட்டில் இருந்து நடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோர் ரூ.25 லட்சமும், நடிகர் கமல்ஹாசன் ரூ.25 லட்சமும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ரூ.5 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்பட்டுள்ளன.
ரோகினி நிதியுதவி
இந்நிலையில் நடிகை ரோகினி, கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.2 லட்சம் நன்கொடையாக வழங்கியுள்ளார். நிதியுதவி அளித்த ரோகினிக்கு கேரள அரசு நன்றி தெரிவித்துள்ளது.

வெறும் 10 லட்சம்
கேரள நடிகர்கள் சங்கம் வெறும் 10 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. 400-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே கேரள நடிகர் சங்கமான அம்மா வழங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











