Vettaiyan: தியேட்டரையே தெறிக்க விட்டாரு தலைவரு.. வேட்டையன் படத்தை புகழ்ந்த நடிகை ரோகினி!

சென்னை: ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் கூட்டணியில் இன்று வெளியாகி உள்ளது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் படத்தை வெகுவாக கொண்டாடி வரும் நிலையில், ரோகினி தியேட்டரில் படம் பார்த்து படத்தில் நிறைய தெறிக்கவிடும் காட்சிகள் இருப்பதாக கூறினார்.

ஜெய்பீம் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்துடன் அமிதாப் பச்சன் 33 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்து நடித்துள்ளார். மேலும், ராணா டகுபதி, பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் என பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

vettaiyan rajini rohini

போலி என்கவுன்டர்கள் மற்றும் கல்வி மோசடி போன்ற பொதுமக்களின் பிரச்சனையை வேட்டையன் திரைப்படம் பேசிஉள்ளதாக படம் பார்த்தவர்கள் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜெயிலர் படத்திற்கு பின் இந்த படத்திலும் ரஜினி துப்பாக்கியை கையில் எடுத்து வேட்டையாடி உள்ளார். இதில், அதியன் என்ற கதாபாத்திரத்தில் மாஸ் காட்டி உள்ளார் ரஜினி. யூடியூபராகவும் ரஜினியின் மனைவியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். அதே போல ஆசிரியராக வரும் துஷாரா விஜயனுக்கு நல்ல கதாபாத்திரம் கிடைத்துள்ளது.

தெறிக்கவிட்ட ரஜினி:இந்நிலையில், ரோகினி திரையரங்கில் வேட்டையன் படம் பார்த்த நடிகை ரோகினி, அளித்துள்ள பேட்டியில் ஞானவேல் ஒரு சிறப்பான இயக்குநர், அது மட்டுமில்லாமல் ரஜினி சார் காமினேஷன் என, படத்தில் ரெண்டு விஷயமும் படத்தில் நல்லா வொர்கவுட் ஆகி இருக்கு. இந்த படத்தில் என்கவுன்டர் என்கிற விஷயத்தில் இயக்குநர் நல்லமுறையில் கையாண்டு இருக்கிறார். படத்தில் பல இடத்தில் தெறிக்கவிடும் காட்சிகள் இருக்கிறது. குறிப்பாக ரஜினி சாருக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே நடக்கும் போராட்டம் ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது. அவர் வந்து சும்மா வந்துவிட்டு போகும் கதாபாத்திரமாக இல்லாமல், அவருக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள். அதே நேரத்தில் ரஜினி தனது ரசிகர்களை திருப்திப்படுத்தும் படமாகவும் இப்படம் இருக்கு.

படத்தின் பிளஸ்: படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால், அது வசனம் தான் பொதுமக்கள் நினைக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் பிரதிபலிக்கும் வகையில் ரொம்ப ஷர்ப்பாக இருக்கும். படத்தின் கதை ஸ்டோரி ஓரியண்டாககவும்,அதே நேரம் ரசிகர்களுக்கு பிடித்த வகையிலும் படம் இருப்பது தான் வேட்டையன் படத்தின் ஸ்பெஷல் என ரோகினி படத்தை வெகுவாக புகழ்ந்து இருந்தார். அதே ரோகினி தியேட்டரில் லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாவுடன் படம் பார்க்க வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய லதா,வேட்டையன் படத்தின் ஒட்டுமொத்த டீமுக்கும் என் வாழ்த்துக்கள் என்றார். மேலும், ரஜினி சார் நன்றாக இருக்கிறார். அவருக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றி என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X