நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி... 2 ஆப்பரேஷன் முடிந்தது

சென்னை : 1990 களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. பிறகு அரசியலில் குதித்த இவர், தற்போது ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் இரண்டாவது முறையாக எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் திடீரென சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இதனால் ரோஜாவின் உடல்நிலைக்கு என்னாச்சு என அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.செல்வமணியின் ஆடியோ மெசேஜ்

ஆர்.கே.செல்வமணியின் ஆடியோ மெசேஜ்

இந்நிலையில் ரோஜாவின் கணவரும், டைரக்டருமான ஆர்.கே.செல்வமணி ஆடியோ மெசேஜ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது மனைவிற்கு 2 முக்கியமான பெரிய ஆப்பரேஷன்கள் செய்ய வேண்டி இருந்தது.

ஐசியு.,வில் அனுமதி

ஐசியு.,வில் அனுமதி


அதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொல்ல முடியாத சில பிரச்னைகளால் ஆப்பரேஷன் நடத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பே செய்யப்பட வேண்டிய ஆப்பரேஷன்.

 தள்ளிப் போடப்பட்ட ஆப்பரேஷன்

தள்ளிப் போடப்பட்ட ஆப்பரேஷன்

தேர்தல் காரணமாக நீண்ட காலமாக தள்ளிப் போடப்பட்ட ஆப்பரேஷன் என்பதால், தற்போது அவசரமாக மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்றார். மேலும் ரசிகர்கள் யாரும் மருத்துமவனைக்கு வர வேண்டாம் எனவும் ஆர்.கே.செல்வமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

விரைவில் குணமடைவார்

விரைவில் குணமடைவார்

லட்சக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் பிரார்த்தனையால் ரோஜாவிற்கு ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்தது. விரைவில் அவர் குணமடைவார் எனவும் செல்வமணி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X