கொரோனாவை விரட்ட ருத்ராபிஷேகம்.. குடும்பத்துடன் நடிகை ரோஜா ஆர்கே செல்வமணி நடத்திய சிறப்பு யாகம்!

சென்னை: கொரோனா வைரஸ் நாடு முழுவதையும் அச்சுறுத்தி வரும் நிலையில் அதனை தடுக்க வேண்டி நடிகை ரோஜா தனது குடும்பத்துடன் வீட்டில் ருத்ராபிஷேகம் நடத்தியுள்ளார்.

Recommended Video

Soori family Kind advice | Self Qurantine

செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரோஜா. தொடர்ந்து சூரியன், உழைப்பாளி, வீரா, வள்ளல், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், என் ஆசை ராசாவே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட நடிகை ரோஜா தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக புலன் விசாரணை 2, என் வழி தனி வழி ஆகிய படங்களில் நடித்தார்.

அரசியலில் பிஸி

அரசியலில் பிஸி

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா இயக்குநர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். சினிமாவில் நடித்து வந்தாலும் ஆந்திர அரசியலில் பிஸியாக உள்ளார் நடிகை ரோஜா.

ருத்ராபிஷேகம்

ருத்ராபிஷேகம்

ரோஜா தற்போது நகரி தொகுதி எம்எல்ஏவாக இருக்கிறார். எம்எல்ஏ என்ற முறையில் கொரோனா பாதிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் ரோஜா. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக தனது வீட்டில் ருத்ராபிஷேகம் என்ற யாகத்தை நடிகை ரோஜா மற்றும் அவரது கணவர் ஆர்கே செல்வமணி ஆகியோர் குடும்பத்துடன் நடத்தியுள்ளனர்.

சிறப்பு யாகம்

சிறப்பு யாகம்

இந்த சிறப்பு யாகத்தில் அவர்களின் பிள்ளைகளும் கலந்து கொண்டனர். குடும்பத்துடன் யாகம் நடத்திய வீடியோவை ரோஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அவர்கள் யாகம் நடத்திய போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தைரியமா இருங்க

தைரியமா இருங்க

யாகத்தின் முடிவில் பேசிய நடிகை ரோஜா, இந்த நாடு நன்றாக இருக்க வேண்டும், நாட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தீர வேண்டும். கொரோனாவில் இருந்து தப்பித்து மக்கள் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும், அதற்காகத்தான் ஏகாதசியில் இந்த ருத்ராபிஷேக யாகத்தை நடத்தியிருக்கிறோம். எல்லா மக்களும் எல்லா வளத்துடனும் நன்றாக இருப்போம். எல்லோரும் சந்தோஷமா இருங்க தைரியமா இருங்க என தெரிவித்துள்ளார்.

ஃபெஃப்சி தொழிலாளர்கள்

ஃபெஃப்சி தொழிலாளர்கள்

நடிகை ரோஜாவின் கணவரான ஆர்கே செல்வமணி, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என அழைக்கப்படும் ஃபெஃப்சி அமைப்பின் தலைவராக உள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பல தொழிலாளர்களின குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன.

உதவிக்கரம்

வறுமையில் தவிக்கும் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நல்ல நிலையில் இருக்கும் நடிகர் நடிகைகள் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் பலரும் ஃபெஃப்சி அமைப்புக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரோஜா 100 அரிசி மூட்டைகளை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X