நடிகை ரோஜா - செல்வமணி மகளுக்கு விருது.. அடடே இப்படி ஒரு திறமையா அவங்க பொண்ணுக்கு!
சென்னை: நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் மூத்த நடிகைகளில் ஒருவர். இது மட்டும் இல்லாமல் இவர் ஆந்திரா அரசியலில் முன்னாள் அமைச்சராகவும் பணியாற்றியவர். இவரது மகள் அன்சு மலிகாவுக்கு மவுரீன் பிக்கர்ஸ் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. இது நடிகை ரோஜா - இயக்குநர் செல்வமணி தம்பதியருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திரைப்பட இயக்குநர் மற்றும் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி-நடிகை ரோஜா தம்பதியின் மகள் அன்சு மாலிகா. இவர் அமெரிக்காவில் உள்ள இண்டியானா பல்கலைக்கழகத்தில் அறிவாற்றல் அறிவியல் படிப்பில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பெண்கள் மற்றும் தொழில்நுட்பத்துக்கான சிறப்பு மையம் கடந்த 2023ஆம் ஆண்டில் இருந்து வழங்கி வரும் விருதான மவுரீன் பிக்கர்ச் என்ற விருதை அன்சு மாலிகாவுக்கு அறிவித்துள்ளது.

அன்சு மாலிகாவுக்கு 2025-ம் கல்வியாண்டுக்கான "மவுரீன் பிக்கர்ஸ்" என்ற தலைமைத்துவ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது என்பது சான்றிதழ் மற்றும் ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஊக்கத் தொகையாக வழங்கப்படும். விரைவில் அவருக்கு அந்த விருதும் ஊக்கத்தொகையும் வழங்கப்படவுள்ளது. இந்த தகவல் நடிகை ரோஜா மற்றும் இயக்குநர் ஆர்.கே. செல்வமணியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருத்தணி வேண்டுதல்: அண்மையில் நடிகையும் ஆந்திரா முன்னாள் அமைச்சருமான ரோஜா திருத்தணி முருகன் கோவிலுக்கு வெள்ளியில் வேல் செய்து காணிக்கையாக செலுத்தினார். வெள்ளி வேலை காணிக்கையாக செலுத்த அவர் காவடி தூக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது. அதேபோல் மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் பிறந்த நாள் கடந்த மாதத்தில் கொண்டாடப்பட்டது.

RK செல்வமணி: அப்போது அவரது 100வது படமான கேப்டன் பிரபாகரன் படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது சில ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி புலன் விசாரணை படத்திலும் கேப்டன் பிரபாகரன் படத்திலும் விஜயகாந்த் உடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் தான் சினிமாவில் சம்பாதிப்பதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது நான் போடும் பல ஆடைகளை எனது மனைவிதான் எனக்கு வாங்கிக் கொடுக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். செல்வமணி மற்றும் ரோஜா தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











