»   »  கள்ளச் சாராய கடைகளை அடித்து நொறுக்கிய நடிகை ரோஜா!

கள்ளச் சாராய கடைகளை அடித்து நொறுக்கிய நடிகை ரோஜா!

Subscribe to Oneindia Tamil

நகரி:

ஆந்திராவில் கள்ளச் சாராயக் கடைகளை பெண்களுடன் சென்று அடித்து நொறுக்கினார் நடிகை ரோஜா.

தெலுங்கு தேசம் கட்சியின் மகளிர் அணி தலைவியாக உள்ள ரோஜா மிக ஆர்வமாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார் ரோஜா. அப்போது மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மிகச் சாதாரணமாக கள்ளச் சாராய கடைகள் இருப்பதைப் பார்த்தார்.

அதிர்ச்சியடைந்த ரோஜா ஒரு பகுதியில் பெண்களை திரட்டிக் கொண்டு கள்ளச் சாராய கடைக்குள் புகுந்து அடித்து நொறுக்கினார். ரோஜா மற்றும் பெண்களின் ஆவேசத்தைப் பார்த்த சாராய வியாபாரிகளும் குடிமகன்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.

ஒரு கடையில் ஆரம்பித்து அடுத்தடுத்து அந்தப் பகுதியில் இருந்த 5க்கும் மேற்பட்ட கடைகளில் நுழைந்து அடித்து நொறுக்கி விட்டாராம் ரோஜா.

இது குறித்து ரோஜா கூறிகையில்,

ஆந்திராவில் கணக்கில் அடங்காத கள்ளச் சாராய கடைகள் உள்ளன. ஆனால், காங்கிரஸ் அரசு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததால் நானே நேரடியாக நடவடிக்கையில் இறங்கி விட்டேன். இந்த அதிரடி நடவடிக்கை மாநிலம் முழுவதும் தொடரும் என்றார்.

Read more about: roja
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil