என் சமையல் அறையில்.. ஜாலியாக சமைத்து அசத்தும் ரோஜா !
சென்னை : நடிகை ரோஜா ஊரடங்கு உத்தராவால் தன் வீட்டில் தானே சமைக்கும் வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகை ரோஜா என்று யாரும் அழைப்பது கிடையாது ஏனெனில் ரோஜா கடந்த 6 வருடமாக அரசு பணியாற்றி வருகிறார் எம்.எல்.ஏ ரோஜா வாக மக்கள் பணியில் இருக்கிறார். ஆந்திரபிரதேசத்தின் சட்டசபையில் ஒய்.எஸ். ஆர்.காங்கிரஸ் கட்சியில் முக்கிய பொருப்பில் இருக்கிறார். இவர் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் அரசு பணியாட்களுக்கு சிறு அளவிலான விடுமுறை கிடைத்துள்ளது. இந்த நேரத்தில் எம்.எல்.ஏ ரோஜா தன் வீட்டில் தானே சமைத்து அதை தன் மகனுக்கு ஊட்டிவிட்டு சுவை பார்க்க சொல்கிறார். இறுதியாக சமைத்த பின் மஸ்ரூம் கறி ரெடி என மகிழ்ச்சியாக கேமார முன் கூறிவிட்டு செல்கிறார்.. தற்போது இந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .
ரோஜா போல பல நடிகர்களும் தங்களின் இல்லங்களில் தாங்கள் பொழுதுபோக்க என்னவெல்லாம் செய்து வருகிறோம் என்று காணொலிகள் மூலம் பகிர்ந்து வருகின்றனர் .
நடிகர் பரத் தன் குழந்தைகளுடன் விளையாடி விடுமுறையை கழித்து வருகிறார். தன் குழந்தையை தூக்கி உடற்பயிற்சி செய்தும் அவர்களுக்கும் உடற்பயிற்சிகளை கற்று தர முயன்றும் வருகிறார் .

மேலும் நடிகர் விஷ்ணு விஷால் தன் உடலை கட்டு கோப்பாக வைக்க முயன்று வருகிறார். தன் வீட்டு மாடியிலே அனைத்து உடற்பயிற்சி பொருட்களையும் வைத்து உடற்பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார்
உலகம் முழுவதும் 19000 அதிகமான உயிரை கொரோனா பறித்துள்ள நிலையில் உலகத்தின் அனைத்து நாடுகளும் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி வருகின்றன. இந்த நேரத்தில் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க உள்ள நிலையில் தற்போது இதை சமாளிக்க பல பிரபலங்களும் தங்களால் முடிந்த ஃபாசிடிவ்வான விஷயங்களை செய்து வருகின்றனர் மேலும் அதை பகிர்ந்தும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











