Actress Roja: திடீரென மருத்துவமனையில் அட்மிட்டான நடிகை ரோஜா... அதிர்ச்சியில் ரசிகர்கள்..?
சென்னை: 1992ல் வெளியான செம்பருத்தி திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரோஜா.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரோஜா, இயக்குநர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டார்.
நடிப்பைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கிய ரோஜா தற்போது ஆந்திராவில் நகரி தொகுதி அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ரோஜா திடீரென சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பல்லோவில் அட்மிட்டான ரோஜா:பிரசாந்த் ஹீரோவாக நடித்த செம்பருத்தி திரைப்படம் 1992ம் ஆண்டு வெளியானது. ஆர்கே செல்வமணி இயக்கிய இந்தப் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் தான் ரோஜா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்திழுத்த ரோஜா, தொடர்ந்து பல படங்களில் நடித்தார். சூரியன், உழைப்பாளி, ஆயுத பூஜை போன்ற படங்கள் ரோஜாவின் கேரியரில் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.

செம்பருத்தி படம் வெளியானபோதே இயக்குநர் ஆர்கே செல்வமணியை காதலிக்கத் தொடங்கினார் ரோஜா. இவர்களின் காதல் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2002ல் திருமணத்தில் முடிந்தது. திருமணத்திற்குப் பிறகும் நடிப்பில் கவனம் செலுத்திய ரோஜா திடீரென அரசியலில் களமிறங்கினார். தற்போது YSR காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு, ஆந்திர மாநிலம் நகரி தொகுதியில் வெற்றிப் பெற்றார்.
இதனையடுத்து சுற்றுலா, கலாச்சாரம், இளைஞர்நலன் ஆகிய துறைகளின் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியல் ரீதியான கருத்துகளை அதிரடியாக பேசி வரும் ரோஜா, எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறார். இந்நிலையில் நடிகை ரோஜா திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளாராம். கால் வீக்கம் காரணமாக சிகிச்சை எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும், இதுகுறித்து ரோஜா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ரோஜா தற்போது நலமுடன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்னர் ரோஜாவின் மகளும் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகிறார் என செய்திகள் வெளியாகின. ஆனால், தனது மகளுக்கு நடிப்பதில் விருப்பம் இல்லையென்பதால் அதற்கு வாய்ப்பே இல்லை என ரோஜாவும் ஆர்கே செல்வமணியும் விளக்கம் கொடுத்திருந்தனர்.


Click it and Unblock the Notifications











