ஆத்தாடி.. ஒவ்வொரு ரூமும் வீடு மாதிரி இருக்கே.. நடிகை ரோஜாவின் சொகுசு வீடு!
சென்னை: முன்னணி நடிகை ரோஜாவின் பிரம்மாண்டமான ஹோம் டூர் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.
செம்பருத்தி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார்.

இதையடுத்து, ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ரோஜா: செம்பருத்தி படத்தில் நடித்த போதே, ரோஜாவுக்கும் ஆர்கே செல்வமணிக்கு இடையே காதல் தீ பற்றிக்கொண்டது. அதையடுத்து, ரோஜாவை வைத்து ஒரு சில படங்களை ஆர்கே செல்வமணி இயக்கிய நிலையில், இருவரும் திருமணமும் செய்துக் கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

அரசியலில் தீவிரம்: ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட நடிகை ரோஜா, 1999ம் ஆண்டு தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் 2009ம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ரோஜா பின்னாளில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.
ஹோம் டூர்: அண்மையில் தனது பிறந்த நாளை கொண்டாடிய ரோஜா, ஊடகம் ஒன்றுக்கு அரண்மனை போல இருக்கும் வீட்டை சுற்றிக்காட்டி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவில், வீட்டின் வரவேற்பு அறையில் அழகாக பிரேம் செய்யப்பட்ட குடும்ப புகைப்படமும் சில கலை பொருட்களும் உள்ளது.

பிரம்மாண்ட வீடு: அடுத்து, படுக்கை அறை, சமையல் அறை, பூஜை அறை என அனைத்தும் வாயை பிளக்கும் அளவிற்கு தரமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்ண விளக்குகள், அலங்கார பொருட்கள் என அனைத்தையும் ரோஜா அந்த வீடியோவில் வளைத்து வளைத்து சுத்திக்காட்டி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒவ்வொரு ரூமும் வீடுபோல இருக்கே என வாயை பிளந்து பார்த்து வருகின்றனர்.

நடிகர் ரோஜாவின் மொத்த சொத்து மதிப்பு, ரூ 70 கோடி என்றும், ஹைதராபாத் மற்றும் சென்னையில் அவருக்கு சொத்தமாக பல வீடுகள் உள்ளன. அவற்றின் மதிப்பு பல கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











