என்னா ஸ்பிரிட்.. இளைஞர்களுடன் குதூகலமாய் கபடி விளையாடிய நடிகை ரோஜா.. தெறிக்கவிடும் வீடியோ!

சென்னை: நடிகை ரோஜா இளைஞர்களுடன் குதூகலமாய் கபடி விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகை ரோஜா செம்பருத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

1990களில் டாப் நடிகையாக வலம் வந்த ரோஜா, ரஜினி, சரத்குமார், கார்த்தி, விஜய், பிரபுதேவா என பலருடனும் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

குணச்சித்திர கேரக்டர்

குணச்சித்திர கேரக்டர்

தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார் ரோஜா. தொடர்ந்து இன்று வரை சினிமாவில் நடித்து வரும் ரோஜா, அக்கா, அத்தை போன்ற குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

அரசியலில் தீவிரம்

அரசியலில் தீவிரம்

கடந்த 2002ஆம் ஆண்டு இயக்குநர் ஆர்கே செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடிகை ரோஜா, ஆந்திர அரசியலிலும் தீவிரமாக உள்ளார்.

கபடி போட்டி

கபடி போட்டி

நகரி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார் நடிகை ரோஜா. இந்நிலையில் நடிகை ரோஜாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நகரி பகுதியில் இளைஞர்களுக்கான கபடி போட்டியை தொடங்கி வைக்க சென்றார் அந்த தொகுதி எம்எல்ஏவான ரோஜா.

கபடி ஆடிய ரோஜா

கபடி ஆடிய ரோஜா

அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இதனை தொடர்ந்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாட தொடங்கிவிட்டார் ரோஜா.

தீயாய் பரவும் வீடியோ

தீயாய் பரவும் வீடியோ

இதனை பார்த்த அப்பகுதி மக்களும் இளைஞர்களும் பெரும் உற்சாகம் அடைந்தனர். நடிகை ரோஜா, இளைஞர்களுடன் சேர்ந்து கபடி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

More from Filmibeat

Read more about: roja ரோஜா கபடி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X