சினிமாவுக்கு வரும் ரோஜா மகள்.. எவ்வளவு க்யூட்டா இருக்காங்க!

ஐதராபாத் : நடிகை ரோஜா மற்றும் இயக்குநர் ஆர்கே செல்வமணி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள்.

Recommended Video

நடிகை ரோஜாவின் மகன் விஜய்யின் வெறித்தனமான ரசிகரா? இவரே 100 அக்கவுன்ட் க்ரீயேட் பண்ணா.. மத்தவங்க?

இவர்களது மகள் அன்ஷுமாலிகா தற்போது அமெரிக்காவில் பிரபல திரைப்பட கல்லூரியில் படித்து வருகிறார்.

இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவரை நடிகையாக்க டோலிவுட் இயக்குநர்கள் வரிசைக்கட்டி வருகின்றனர்.

நடிகை ரோஜா

நடிகை ரோஜா

நடிகை ரோஜா மற்றும் இயக்குநர் செல்வமணி இருவரும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள். ரோஜாவை வைத்து ஒரு சில படங்களை ஆர்கே செல்வமணி இயக்கிய நிலையில், இருவரும் காதல் வசப்பட்டனர். தொடர்ந்து திருமணமும் செய்துக் கொண்டனர். தற்போது ரோஜா அரசியல் -நடிப்பு என்று தன்னை பிசியாக வைத்துக் கொண்டுள்ளார்.

இயக்குநர் ஆர்கே செல்வமணி

இயக்குநர் ஆர்கே செல்வமணி


ஆர்கே செல்வமணி தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இவர்களது மகள் அன்ஷுமாலிகாதான் தற்போது டோலிவுட்டின் டாக் ஆப் தி டவுனாக காணப்படுகிறார். அமெரிக்காவின் பிரபல திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், திரைக்கதை எழுதுதல் குறித்து படித்து வருகிறார் அன்ஷுமாலிகா.

ரோஜா மகள் அன்ஷுமாலிகா

ரோஜா மகள் அன்ஷுமாலிகா

இவர் படிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பியதும் நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் இதற்காக டோலிவுட்டில் சில இயக்குநர்கள் ரோஜா -செல்வமணியை சுற்றி வந்ததாகவும் அவர்களும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது க்யூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையதளத்தில் வெளியாகி வருகின்றன.

 சிறப்பான எழுத்தாளர்

சிறப்பான எழுத்தாளர்

அன்ஷுமாலிகா சிறந்த எழுத்தாளரும்கூட. இவர் எழுதிய தி ஃப்ளேம் இன் மை ஹார்ட் என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. இதற்காக சமீபத்தில் தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை அன்ஷுமாலிகா பெற்றார். இதையடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

விரைவில் நடிகையாக களம்

விரைவில் நடிகையாக களம்

தன்னுடைய திறமையை எழுத்தாளராக நிரூபித்துள்ள அன்ஷுமாலிகா, தொடர்ந்து நடிப்பிலும் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ரோஜா தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. அன்ஷுமாலிகா ஹீரோயினாக களமிறங்கினால், தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த வரவேற்பை பெறுவார் என்று கூறலாம்.

ரசிகர்களை கவர்ந்த ரோஜா

ரசிகர்களை கவர்ந்த ரோஜா

நடிகை ரோஜா 90களில் மிகச் சிறந்த நடிகையாக இருந்தார். இவரது நடிப்பு, அழகு மற்றும் கவர்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் இணைந்து நடித்துள்ளார். குறிப்பாக சரத்குமாருடன் இவர் இணைந்து நடித்த சூரியன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தன. அந்த வகையில் இவரது மகளும் தற்போது நடிகையாக உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X