twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பர்த்டே ஸ்பெஷல்.. ஹோட்டல் தொடங்கிய ரோஜா.. ஒரு சாப்பாடு விலை என்ன தெரியுமா?

    மலிவு விலை உணவகம் தொடங்கியுள்ளார் நடிகை ரோஜா.

    |

    Recommended Video

    உணவகம் தொடங்கிய ரோஜா.. ஒரு சாப்பாடு விலை என்ன தெரியுமா?

    சென்னை: பிறந்தநாளை முன்னிட்டு மலிவு விலை உணவகம் ஒன்றை தொடங்கி இருக்கிறார் நடிகை ரோஜா.

    90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்த ரோஜா, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என்று தென்னிந்திய மொழி சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். 10 ஆண்டுகளில் 100 படங்கள் நடித்த நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.

    Actress Roja starts hotel in Nagiri

    1999 ஆம் ஆண்டு அரசியலில் நுழைந்த ரோஜா, கடந்த 2014 ஆம் ஆண்டு நகரி தொகுதி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், தற்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் மாநில மகளிரணி தலைவியாகவும் இருக்கிறார்.

    இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை கொண்டாடினார் ரோஜா. இதையொட்டி நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4 -க்கு வழங்கப்படுகிறதாம்.

    ரோஜாவின் இத்தகைய நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்திருக்கும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ரோஜாவை போல பிற ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏ-களையும் அவரவர் தொகுதியில் இத்தகைய உணவகத்தை ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டிருக்கிறாராம்.

    English summary
    Actress Roja started a hotel in Nagiri for poor people.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X