பிறந்த நாள் கொண்டாடிய "மைக்கல் மதன காமராஜன" ஹீரோயின் "ஜக்குபாய் "
Recommended Video
சென்னை : 80களில் சினிமா துறையில் ஒரு முன்னணி ஹீரோயினாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன், விஜயகாந்த், சத்தியராஜ் என கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து டூயட் பாடியவர் நடிகை ரூபிணி. தனது சிறு வயதிலேயே திரைதுறைக்கு வந்தவர். தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வளம் வந்தவர்.
நடிகை ரூபிணி தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியானதால் நடிப்பை விட்டு விலகி இருந்தார். இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் மீண்டும் சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்தால் நடிக்க விருப்பம் இருப்பதாக தெரிவித்தார்.

மனிதன் திரைப்படத்தின் வரும் " காளை காளை ..." முரட்டு காளை பாடல் செம்ம ஹிட் பாடல். அதன் மூலம் ரூபிணி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
மைக்கல் மதன காமராஜன் திரைப்படத்தில் "ஜக்குபாய்" என்ற கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமானார். அவருக்கென்று ஒரு தனி ஸ்டைல் உள்ளது.

நடிகை ரூபிணி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவர்க்கு கேக் வெட்டி கொண்டாடினர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இரண்டு கேக்குகளை வெட்டினர் ரூபிணி. அந்த கொண்டாட்டத்தின் போது சீரியல் நடிகர்கள் பலரும் இயக்குனர் சுந்தர்.கே.விஜயன்,நடிகர் பொன்னவண்ணன் உள்ளிட்டோர் இருந்தனர். இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அனைவரும் ரூபிணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கேக்குகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டனர்.
ரூபிணிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!


Click it and Unblock the Notifications











