திருமணத்தை அறிவித்தார் பிரபல நடிகை.. நீண்ட நாள் காதலரான நடிகரை மணக்கிறார்.. ரசிகர்கள் வாழ்த்து!

By

கொச்சி: ஒரு அடார் லவ் பட நடிகை தனது காதலரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெளியான படம், ஒரு அடார் லவ். பிரியா வாரியர் கண்களை சிமிட்டும் காட்சிக்காக பரபரப்பாகப் பேசப்பட்ட படம் இது.

இந்தப் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் வெளியானது.

பிரியா வாரியர்

பிரியா வாரியர்

படத்தை ஓமர் லுலு இயக்கி இருந்தார். ஷான் ரஹ்மான் இசை அமைத்திருந்தார். இதில் பிரியா பிரகாஷ் வாரியர், ரோஷன் அப்துல் ரஹுப், ரோஷ்னா அன் ராய் உட்பட பலர் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி படமான இது, மலையாளத்தில் கவனிக்கப்பட்ட அளவுக்கு தமிழில் பெரிய வெற்றி பெறவில்லை.

ரோஷ்னா அன் ராய்

ரோஷ்னா அன் ராய்

இந்தப் படத்தில் பயாலஜி டீச்சராக நடித்திருந்தவர் ரோஷ்னா அன் ராய். இவர் இந்தப் படத்தை அடுத்து, பாபம் செய்யதவர் கேளறியட்டே, சுல், தமாக்கா உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் அங்கமாலி டைரிஸ் படத்தில் நடித்துள்ள கிச்சு டெல்லஸும் காதலித்து வந்தனர்.

திடீர் திருமணம்

திடீர் திருமணம்

முதலில் நட்பாக பழகிய அவர்கள் பிறகு, காதலில் விழுந்தனர். இந்த காதல் பற்றி செய்திகள் வெளியான போது இருவரும் ஏதும் சொல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளனர். இதை நடிகை ரோஷ்னா அன் ராய் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ரொமான்டிக் புகைப்படம்

ரொமான்டிக் புகைப்படம்

'எங்கள் திருமணத்தை அறிவிக்க வேண்டிய நேரம் இது. இந்த வாழ்க்கையை வாழ நான் உற்சாகமாக உணர்கிறேன். உண்மையான காதல் இருக்கிறது என்பதை நிரூபித்ததற்காகவும் என்னை நேசித்ததற்கு நன்றி கிச்சு. சொர்க்கம் நமக்கான திட்டத்தை வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். அதோடு ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அங்கமாலி டைரிஸ்

அங்கமாலி டைரிஸ்

இதையடுத்து அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். கிச்சு, மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ், தண்ணீர் மதன் தினன்கள் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அஜாகஜன் தரம் என்ற படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X