நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.. ரொம்ப சப்போர்ட்.. சிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளிய ருக்மிணி வசந்த்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே23 படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கிவரும் நிலையில் படத்தில சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார்.

ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகி வருகிறது எஸ்கே 23 படம். அடுத்ததாக சல்மான் கானுடன் பாலிவுட்டில் சிக்கந்தர் படத்திலும் ஏஆர் முருகதாஸ் இணைந்துள்ளதால், எஸ்கே23 படத்தின் சூட்டிங்கை அடுத்தடுத்து துரிதப்படுத்தி வருகிறார் ஏஆர் முருகதாஸ். சென்னை விஐடி உள்ளிட்ட பல இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது.

Sivakarthikeyan AR Murugadoss Rukmini Vasanth tamil cinema

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே23 படத்தை இயக்கி வருகிறார் ஏஆர் முருகதாஸ். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார். ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அடுத்தடுத்து நடந்து வருகிறது. அடுத்ததாக பாலிவுட்டில் சல்மான் கானின் சிக்கந்தர் படத்திலும் ஏஆர் முருகதாஸ் இணைந்துள்ளதால் சிவகார்த்திகேயனின் படத்தின் சூட்டிங் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தப் படத்தின் டைட்டில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசாகவுள்ள அமரன் படத்தின் ரிலீஸ் அறிவிப்பை தொடர்ந்து வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

அமரன் படம்: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியுள்ளது சிவகார்த்திகேயனின் அமரன் படம். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இந்தப் படத்தின் பெரும்பாலான சூட்டிங் காஷ்மீரில் பனி படர்ந்த இடங்களில் படமாக்கப்பட்டுள்ளன.

ருக்மிணி வசந்த் பாராட்டு: இதனிடையே சிவகார்த்திகேயனின் எஸ்கே23 படத்தின் சூட்டிங்கும் விரைவில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துவரும் ருக்மிணி வசந்த் இந்தப் படம் குறித்து தன்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயன் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் என்று கூறியுள்ள ருக்மிணி, தன்னுடைய காட்சிகளில் நடிக்க தனக்கு மிகப்பெரிய அளவில் சிவகார்த்திகேயன் ஒத்துழைத்து வருவதாகவும் கூறியுள்ளார். இதேபோல படத்தின் இயக்குநர் ஏஆர் முருகதாசுக்கும் அவர் தனது பேட்டியில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் வில்லன்: ஏஆர் முருகதாஸ் படப்பிடிப்பில் அடுத்தடுத்த காட்சிகளில் உடனுக்குடன் காட்சிகளை மேம்படுத்துவதாகவும் படப்பிடிப்பில் உடனுக்குடன் அவர் காட்சிகளை மேம்படுத்தும் இந்த வித்தை தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் வில்லனாக இணைந்துள்ளார். இதனால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X