அது அயர்லாந்த் அனுராக்.. இயக்குநர் அனுராக் என நினைத்து பாலியல் குற்றச்சாட்டு கூறிய பிரபல நடிகை!

கொல்கத்தா: இளைஞர் ஒருவரை, இயக்குநர் அனுராக் காஷ்யப் என்று நினைத்து பிரபல நடிகை பாலியல் புகார்களை கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்த பாலிவுட் நடிகை பயல் கோஷ், பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறினார்.

தன்னை வீட்டிற்கு வரவழைத்து தன் மீது வலுக்கட்டாயமாக படுத்தார் என்றும் கூறியிருந்தார். தன்னுடன் பாலியல் உறவு கொள்ள முயன்றார் என்றும் சரமாரி குற்றச்சாட்டுக்களை கூறினார்.

கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

இந்த விவகாரம் காட்டுத் தீயாய் பரவியது. இதனை தொடர்ந்து அனுராக் காஷ்யப்பின் முதல் மனைவி, நடிகைகள் டாப்ஸி, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலரும் அனுராக் காஷ்யப்புக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேநேரத்தில் நடிகை கங்கனா ரனாவத் அனுராக் காஷ்யப்புக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார்.

விமர்சனம்

விமர்சனம்

மேலும் அனுராக் காஷ்யப் ஒரு நேர்மையற்ற நபர் என்றும் எந்த மனைவிக்கும் அவர் உண்மையாக இருந்ததில்லை என்றும் சாடியிருந்தார். இதனால் இந்த விவகாரத்திலும் பலரின் விமர்சனத்துக்கு ஆளானார் நடிகை கங்கனா ரனாவத்.

நடிகை குற்றச்சாட்டு

நடிகை குற்றச்சாட்டு

இந்நிலையில் அனுராக் காஷ்யப் விவகாரத்தில் ஒரு ருசிகர சம்பவம் நடந்துள்ளது. அதாவது பிரபல பெங்காலி நடிகையான
ரூபா தத்தா, அனுராக் தன்னிடமும் ஆபாசமாக பேசியதாக கூறி தனக்கு வந்த மெஸேஜ்களின் ஸ்க்ரீன்ஷாட்டுகளை ஷேர் செய்திருந்தார்.

அருவருப்பான நடத்தை

அருவருப்பான நடத்தை

அதில், ஹலோ ஃபிரண்ட்ஸ்.. இது 2014 ஆம் ஆண்டு நான் அனுராக் காஷ்யப்புடன் பேசிக் கொண்டிருந்த காலத்திலிருந்து. அவரது பேஸ்புக் ஐடி அனுராக் சஃபர். அவர் தகாத முறையில் பேசியதால் நான் அவருடன் பேசுவதை நிறுத்தினேன். இந்த மனிதனுக்கு அருவருப்பான நடத்தை வரம்பு கூட தெரியாது.

குற்றச்சாட்டு சரியானதுதான்

குற்றச்சாட்டு சரியானதுதான்

அனுராக் காஷ்யப்பின் பார்வையில் எந்தப் பெண்ணுக்கும் மரியாதை இல்லை. அவரைப்பற்றி தெரிந்த பிறகு நான் கண்டுபிடித்தது இதுதான். என்னுடையது மற்றும் அனுராக் உரையாடலில் இருந்து நீங்கள் அனைவரும் அதை அறிந்திருக்கலாம். அதனால்தான் பயல் கோஷின் குற்றச்சாட்டு சரியானது.

போதை மருந்து சப்ளை

போதை மருந்து சப்ளை

அனுராக் காஷ்யப்பை கடுமையாக தண்டிக்க வேண்டும். மேலும் அவர் போதை மருந்துகளையும் பயன்படுத்துகிறார். அவரது ஆர்ட்டிஸ்டுகளுக்கும் சப்ளை செய்கிறார். தயவுசெய்து என்.சி.பி. அவரிடம் விசாரிக்க வேண்டும். #arrestanuragkashyab, இவ்வாறு நடிகை ரூபா தத்தா குறிப்பிட்டிருந்தார்.

சொந்தமானது இல்லை

சொந்தமானது இல்லை

ஸ்கிரீன் ஷாட்களில் ‘அனுராக்' ஏன் அவர் விருது வென்றார் என்றும், திருமணமான பெண்கள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறும்படி இருந்தது. இந்நிலையில், அந்த அக்கவுண்ட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு சொந்தமானது இல்லை என்று தெரியவந்துள்ளது. அனுராக் சஃபர் கணக்கு முன்பு ‘அனுராக் காஷ்யப்' என்ற பெயரில் இருந்தது, மேலும் ஒரு சில ஊடகங்களும் அனுராக் படங்களைப் பற்றி புகாரளிக்கும் போது அதைக் குறிப்பிட்டன.

நான் அவரில்லை

நான் அவரில்லை

அந்த ஃபேஸ்புக் பயனாளி தனது ஐடியை 2009 இல் அனுராக் சாஃபர் என்று மாற்றினார். ட்விட்டரிலும் அதே பெயரில் மாற்றினார். மேலும் தான் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான அனுராக் காஷ்யப் இல்லை. நான் வேற அனுராக், தயவுசெய்து அவரைக் கருத்தில் கொண்டு என்னைப் தவறாக்க வேண்டாம் என்று அவர் 2010 இல் ஒரு பேஸ்புக் பதிவில் எழுதியிருந்தார்.

வெரிஃபைடு அக்கவுண்ட்

வெரிஃபைடு அக்கவுண்ட்

மேலும் இந்த அனுராக் அயர்லாந்தை சேர்ந்தவர் என்றும் தற்போது தெரியவந்துள்ளது. ஏற்கனவே அனுராக் காஷ்யப் ஊடகம் ஒன்றில் தான் பயன்டுத்தும் அக்கவுண்ட் இது அல்ல என மறுத்தார். அவர் anuragkashyap1972 என்ற யூசர் நேமில் தான் பேஸ்புக்கில் இருப்பதாகவும் வெரிஃபைடு அக்கவுண்ட் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X