Nethran Death: சாகுற வயசா இது.. தினமும் வலியால துடிச்சாரு.. நேத்ரனை நினைத்து கலங்கும் நடிகை!

சென்னை: சீரியல் மற்றும் திரைப்படம் என பலவற்றில் நடித்து வந்த நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மறைவு பலரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், நடிகை ரூப ஸ்ரீ, நேத்ரனுக்கு சாகுற வயசா என கண் கலங்கி பேசிஉள்ளார்.

மருதாணி சீரியலில் அறிமுகமாகி நடிகரானவர் யுவராஜ் நேத்ரன். அந்த சீரியலைத் தொடர்ந்து, பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.தன்னுடன் சீரியலில் நடித்த, தீபாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு அபிநயா, அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிக்காமல் குடும்பத்தை கவனித்துகொண்ட தீபா, குழந்தைகள் வளர்ந்த பின் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுத்து, தீபா சிங்கப்பெண்ணே, முத்தழகு உள்ளிட்ட தொடர்களில் நடித்து வருகிறார்.

nethran death rupashree

புற்றுநோய்: நேத்ரனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கேன்சர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இருப்பினும், அவரது கல்லீரல் பாதிக்கப்பட்டதால், அவருக்கு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்த நிலையில், கடந்த வாரம் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சாகுற வயசா இது: நேத்ரன் குறித்து, அவர்களின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியல, ரொம்ப அற்புதமான மனிதர், எல்லார்கிட்டயும் ரொம்ப நல்லா பேசுவாரு, நல்லா பாடுவாரு, நல்லா டான்ஸ் ஆடுவாரு, செட்டுல நாங்க அவரை டான்ஸ் ஆட சொல்லுவோம் பார்ப்போம். ஒருவாட்டி ரஞ்சிதம் செட்ல திடீர்னு நெஞ்சு புடிச்சிட்டு உக்காந்துட்டாரு, அதுக்கு அப்புறம் ஷூட்டிங்கை நிறுத்திட்டு அவருக்கு சுடுதண்ணி எல்லாம் கொடுத்தோம், அதுக்கப்புறம் நீங்க ஹாஸ்பிடலுக்கு போங்க என்று சொன்னோம். ஆனா அவரு இது கேஸ் பிராப்ளம் தான். நெனச்சிட்டு இருந்தாரு.

கொடுமையான மரணம்: அதன் பிறகு தான் அது கேன்சர் என்று தெரியவந்து, ட்ரீட்மென்ட் எல்லாம் போயிட்டு இருந்தாரு, ஒருமுறை வீடியோ காலில் அவரிடம் பேசினேன். ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். அப்போதுகூட வலி வலினு சொல்லிகிட்டே இருந்தார். ஆனா திடீர்னு இப்படி ஆகும்னு யாருமே நினைக்கவே இல்ல. ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க, ரெண்டு பேருமே சின்ன குழந்தைங்க இப்பதான் வளர்ந்துகிட்டு வராங்க இன்னும் அவங்க சாதிக்கணும், கல்யாணம் பண்ணனும்னு நிறைய விஷயம் இருக்கு. அதுவும் நேத்திரனுக்கு சாகுற வயசே கிடையாது. அதைவிட கொடுமை தீபா இந்த நிலைமையில எங்களால பாக்கவே முடியல. இதெல்லாம் நினைச்சு பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு, இது கொடுமையான சாவு யாரா இருந்தாலும் தயவு செய்து உங்களுடைய உடம்ப கொஞ்சம் பார்த்துகோங்க என்று நடிகை ரூபஸ்ரீ கண்கலங்கி அந்த பேட்டியில் பேசியுள்ளார்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X