பரதேசி படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்துள்ள நடிகை ரித்விகா ... !

சென்னை : நடிகை ரித்விகா தற்போது கொரன்டைன் நேரத்தில் தனது பழைய நினைவுகளை எல்லாம் பகிர்ந்து வருகிறார். இதில் தனது முதல் படமான பரதேசி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கபட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருக்கிறார் .

பரதேசி படம் தான் ரித்விகா நடித்த முதல் படம் .தனது முதல் படமே பாலாவின் இயகத்தில் .பாலா படங்களில் நடித்த பிறகு நடிகர் நடிகையர் என பலரும் பல்வேறு உயரத்திற்கு சென்றிருக்கின்றனர். பரதேசி படத்திற்கு பின்பு தான் அதர்வாவிற்கு வாய்ப்புகள் வந்து குவிந்தது என்று கூறலாம். ஏனெனில் பாலா தனது படங்களில் நடிக்கும் நடிகர்களிடம் இருந்து சிறந்த அளவில் நடிப்பை வாங்குவார். அது நல்ல பயிற்சியாக பலருக்கும் அமையும்.

actress rytwika releases old photos

பரதேசி படம் பெரிய அளவில் பாராட்டபட்ட படம் இதில் சிறிய வேடத்தில் ரித்விகா நடித்து இருந்தாலும் நல்ல பாராட்டை பெற்றிருந்தார் .ரித்விகா இந்த படத்தில் நடித்ததன் மூலம் பட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார்.

தற்போது தன் முதல் படத்தின் நினைவை பகிரும் வகையில் பரதேசி படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார் ரித்விகா.இதில் ஒரு புகைப்படத்தின் கீழ் இது தான் சினிமாவில் எனக்கு முதல் காட்சி அவ்வளவு டென்சனாக இருந்தது என்று கூறியிருக்கிறார் .

actress rytwika releases old photos

இதில் மற்றொரு புகைப்படத்தில் இயக்குனர் சுதா கொங்கார இடம் பெற்றிருப்பது ரசிகர்களை ஆச்சரிய பட வைத்துள்ளது. இந்த புகைப்படத்தில் படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சி எடுக்கபடும் போது இயக்குனர் பாலாவிற்கு உதவி செய்யும் வகையில் அருகில் நிற்கிறார் சுதா கொங்காரா .

actress rytwika releases old photos

சுதா கொங்காரா தனது முதல் படமான துரோகி படத்திற்கு பிறகு இறுதிச்சுற்று படத்தை ஆரம்பிக்க மிகவும் சிரமப்பட்டு வந்தார் அந்த சமயத்தில் பாலாவின் இயக்குனர் குழுவில் பணியாற்றி வந்தார் சுதா கொங்காரா. பாலாவின் இயக்குனர் குழுவில் கிரியேடிவ் இயக்குனராகவும் அசோசியேட்டாகவும் பணிபுரிந்து வந்தார் இயக்குனர் சுதா கொங்காரா. இதன் பிறகு தான் இறுதிச்சுற்று படத்தை இயக்கினார் சுதா .

actress rytwika releases old photos

இந்த படத்தை குறிப்பிட்டு சுதா பெயரையும் குறிப்பிட்டே தற்போது புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார் நடிகை ரித்விகா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் படத்தை பற்றிய தங்களின் நினைவுகளையும் ரித்விகா பற்றியும் கமெண்டில் பல நல்ல விஷயங்களை கூறி வருகின்றனர் .
ரித்விகா தற்போது கொரன்டைன் நேரத்தில் தனது முழு நேரத்தையும் தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார்.

actress rytwika releases old photos

தற்போது கிடைக்கும் நேரங்களில் சமூகவலைத்தளங்களுக்கு வரும் ரித்விகா தனக்கு பிடித்த பல விஷயங்களையும் நினைவுகளையும் பகிர்ந்து செல்கிறார் .முக்கியமாக சமீபத்தில் கூட தான் நடிப்பிற்காக செய்த தனது முதல் போட்டோசூட்டையும் பகிர்ந்து இருந்தது குறிப்பிடதக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X