நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டதற்கு காரணம் இதுதானா.. தோழி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

சென்னை: நடிகை சபர்ணா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை அவரது நெருங்கிய தோழி தற்போது வெளியிட்டுள்ளார்.

நடிகை சபர்ணா டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியாக சின்னத்திரைக்கு அறிமுகமானார். தொடர்ந்து சீரியல்களில் நடித்த சபர்ணா ஒரு சில சீரியல்களில் வில்லியாகவும் நடித்தார்.

படிக்காதவன், காளை, பூஜை உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாகவும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்.

அழுகிய நிலையில் உடல்

அழுகிய நிலையில் உடல்

கோவையை சேர்ந்த அபர்ணா, சென்னை மதுரவாயலில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார் சபர்ணா. அவரது உடல் நிர்வாணமாக அழுகிய நிலையில் தூக்கில் தொங்கியது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்கு பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். நடிகை சபர்ணா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரைத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது. சபர்ணாவின் தற்கொலை குறித்த காரணத்தை போலீசார் விசாரித்து வந்தனர்.

தோழி தகவல்

தோழி தகவல்

சபர்ணா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் இதுவரை உறுதியாக வெளியாகவில்லை. இந்நிலையில் சபர்ணா மரணித்து 4 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரது தோழியான சீரியல் நடிகை உஷா எலிசபெத், சபர்ணாவின் தற்கொலை குறித்து பேசியிருக்கிறார். அதாவது, பல நாட்களாக சபர்ணா நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை என தன்னிடம் கூறிவந்ததாக தெரிவித்திருக்கிறார்.

பரபரப்பு

பரபரப்பு

இதன் காரணமாக அவர் பல நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாகவும், ஆனால் தான் சபர்ணாவுக்கு பல முறை எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியும் அவர் இதுபோன்று தற்கொலை முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார். தற்போது வரை நடிகை சபர்ணாவின் மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்க முடிக்காத நிலையில் அவரது தோழி கூறியிருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X