»   »  நடிகை சபர்ணாவின் அறையில் மது, சிகரெட் தடயம்: பலாத்காரம் செய்து கொலையா?

நடிகை சபர்ணாவின் அறையில் மது, சிகரெட் தடயம்: பலாத்காரம் செய்து கொலையா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சபர்ணா நிர்வாண நிலையில் இறந்து கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணா சென்னையில் தனது வீட்டில் நிர்வாணமாக அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சபர்ணா நிர்வாணமாக கிடந்ததால் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சபர்ணா

சபர்ணா

சபர்ணாவின் வீடு பூட்டாமல் சும்மா மூடியிருந்திருக்கிறது. படுக்கையறையில் சபர்ணா நிர்வாணமாக பிணமாக கிடந்துள்ளார். அருகில் அவரது ஆடை மற்றும் சிறு கத்தி இருந்துள்ளது.

சிகரெட்

சிகரெட்

சபர்ணாவின் அறையில் டீக்கப்புகள், பல வகை சிகரெட் துண்டுகள் இருந்துள்ளன. மேலும் போதைப் பொருள் உட்கொண்டதற்கான தடயங்களும் இருந்துள்ளன. சபர்ணாவுக்கு போதைப் பொருள் பழக்கம் இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மது வாங்கி குடித்ததற்கான தடயங்களும் உள்ளது.

டைரி

டைரி

சப்ரணாவின் வீட்டில் இருந்து போலீசார் டைரி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். அதில் எழுதப்பட்டுள்ள விபரங்கள் மூலம் சில முக்கிய துப்பு கிடைத்துள்ளதாம்.

காதல்

காதல்

தமிழில் வாய்ப்பு இல்லாததால் இந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி டெல்லி சென்ற இடத்தில் சபர்ணாவுக்கும் சினிமா பிரமுகர் ஒருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அந்த காதல் தோல்வியில் முடிந்துள்ளது.

ஆண் நண்பர்

ஆண் நண்பர்

சபர்ணாவுக்கு சென்னையில் நெருங்கிய ஆண் நண்பர் ஒருவரும் உள்ளாராம். அவருடன் சபர்ணா அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். கடைசியாக கூட அவரிடம் பேசியதாக கூறப்படுகிறது.

English summary
Police suspect that actress Sabarna could have been sexually assaulted and killed. Sabarna was found dead at her apartment in Chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil