Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என்னது... நான் யோகிபாபுவோட பொண்டாட்டியா? இருவருக்கும் என்ன சம்மந்தம்.. வீடியோ வெளியிட்ட நடிகை!
Recommended Video
சென்னை: யோகி பாபுவுடன் இருக்கும் போட்டோவால் வைரலான நடிகை பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவரது கால்ஷிட்டுக்காக பல முன்னணி நடிகர்களும் தயாரிப்பு நிறுவனங்களும் காத்துக்கிடக்கின்றன.
தன்னுடைய வித்தியாசமான ஹேர் ஸ்டைல், பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி என தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் யோகி பாபு.

யோகிபாபுவின் மனைவி
இந்நிலையில் யோகி பாபுவுடன் ஒரு பெண் இருக்கும் போட்டோ வைரலானது. இதனை பார்த்த நெட்டிசன்கள், அவர்தான் யோகி பாபுவின் மனைவி இருவருக்கும் திருமணமாகிவிட்டது என பெண் லட்டு போன்று இருக்கிறார் என கருத்து தெரிவித்தனர்.

டிவிட்டரில் விளக்கம்
இருவரின் போட்டோக்களும் வைரலானது. ஆனால் இந்த தகவலில் உண்மைஇல்லை என்று கூறிய யோகி பாபு இதுகுறித்து டிவிட்டரில் விளக்கம் அளித்திருந்தார்.
|
வெறும் வதந்தி
அதில், என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.

இரண்டு நாட்களாய் ட்ரென்ட்
இந்நிலையில் யோகிபாபுவுடன் வைரலான நடிகை சபீதா ராய் இதுகுறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை என்று ஆரம்பிக்கும் சபீதா ராய், இரண்டு நாட்களாய் யோகிபாபுவுடன் இருந்த போட்டோவை வைத்து ட்ரென்ட்டாக்கினர்.

யோகி பாபு மறுப்பு
நான்தான் யோகி பாபுவை திருமணம் செய்து கொள்ள போகும் பெண் என்று தகவல் பரவியது. இதனை தொடர்ந்து நேற்று யோகி பாபு மறுப்பு தெரிவித்து விளக்கமளித்தார்.

கன்னிராசி படத்தில்
நான் இன்னும் விளக்கமளிக்கவில்லை என எல்லோரும் என்னை கேட்டு வந்தனர். இதனால் இந்த வீடியோவை தற்போது வெளியிடுகிறேன். 2017ல் கன்னி ராசி படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து நடித்தேன்.

எப்படி வெளியானது?
அப்போது அவருடன் சேர்ந்து எடுத்த செல்பிதான் அந்த போட்டோ. அவர் ஒரு நல்ல நடிகர், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த போட்டோக்கள் எப்படி வெளியானது என்று தெரியவில்லை.

பெயரை கெடுக்காதீர்கள்
அவரை திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் நான்தான் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது. அவருடன் நான் இப்போது 3 படங்களில் நடித்து வருகிறேன். அவருடைய பெயரை கெடுக்காதீர்கள்.
|
வேதனையாக உள்ளது
செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம், ஆனால் இதுபோன்ற ஃபேக் நியூஸ்க்கு முக்கியத்துவம் அளிப்பது வேதனையாக உள்ளது. இவ்வாறு நடிகை சபீதா ராய் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.