twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புலியை காப்பாற்ற டிவிட்டர் கணக்கு தொடங்கிய நடிகை சதா...!

    நடிகை சதா டிவிட்டர் கணக்கு தொடங்கி உள்ளார்.

    |

    சென்னை: பெண் புலியை காப்பாற்றும் நோக்கத்தில் நடிகை சதா டிவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.

    மஹாராஷ்ட்டிரா மாநிலம் யவத்மல் மாவட்டத்தில் உள்ள பந்தர்கவாடா வனப்பகுதியில் இரண்டு குட்டிகளுடன், பெண் புலி ஒன்று இரண்டு மாதங்களாக உலவிக்கொண்டிருக்கிறது. அவ்னி என பெயரிடப்பட்டுள்ள இப்புலி மனிதர்களை வேட்டையாடி வருகிறது.

    பெண் புலி அவ்னி இதுவரை 13 பேரை கொன்றிருக்கிறது. இதனால் மஹாராஷ்டிரா மாநில வனத்துறை, அவ்னியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட மறுத்துவிட்டது.

    அவ்னிக்கு ஆதரவாக பிரச்சாரம்

    அவ்னிக்கு ஆதரவாக பிரச்சாரம்

    இதையடுத்து பெண் புலி அவ்னிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் தன்னையும் இணைத்துக்கொள்ளும் விதமாக நடிகை சதா டிவிட்டர் கணக்கு தொடங்கியுள்ளார்.

    நடிகை சதா டிவிட்டர் கணக்கு

    நடிகை சதா டிவிட்டர் கணக்கு

    அதில், "அவ்னிக்காக இந்த டிவிட்டர் கணக்கை தொடங்கி இருக்கிறேன். நமது தேசத்தின் பெருமைக்குரிய விஷயமான புலியை, அதாவது இரண்டு குட்டிகளுடன் இருக்கும் பெண் புலி அவ்னி இப்போது அபாயகரமான நிலையில் இருக்கிறது.

    வெட்கப்படுகிறேன்

    வெட்கப்படுகிறேன்

    மஹாராஷ்டிரா அரசையும், வனத்துறையையும் நினைத்து வெட்கப்படுகிறேன். அவர்களுடையே தவறை மறைப்பதற்காக, ஒரு புலியை பலியாடு ஆக்குவதா" என கொந்தளித்திருக்கிறார் நடிகை சதா.

    ரசிகர்கள் வரவேற்பு

    நடிகை சதாவின் இந்த அக்கறைக்கு அவரது ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இத்தனை நாட்கள் டிவிட்டர் கணக்கு தொடங்காமல் இருந்த சதா, தற்போது பெண் புலிக்காக கணக்கு தொடங்கியிருப்பதை பலரும் வரவேற்றுள்ளனர்.

    Read more about: tiger நடிகை சதா
    English summary
    Actress Sadaa opened a twitter account to join in the online petition ‘Let Avni Live’ to save a tigress.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X