தாய்ப்பால் என்ன தாவரத்திலிருந்தா வருது? எல்லாம் அசைவம்தான்!

டார்ச்லைட் திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகை சதா மாறுபட்ட தோற்றத்தில் நடிக்கும் டார்ச் லைட் திரைப்பட ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை சதா. அதன்பிறகு விக்ரமுடன் அந்நியன், உன்னாலே உன்னாலே போன்ற படங்களில் நடித்தார். பிறகு தெலுங்கு கன்னட மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.

Actress Sadha bold attempt!

கடைசியாக வடிவேலுக்கு ஜோடியாக எலி திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து டார்ச் லைட் திரைப்படம் மூலம் மிகப்பெரிய ரீ எண்ட்ரி கொடுக்க திட்டமிட்டுள்ளது ட்ரெயிலரில் தெரிகிறது.

நெடுஞ்சாலையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள், பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பணம் பார்க்கும் புரோக்கர்கள், பாலியல் தொழிலாளிகளின் பின்னணி இதை அடிப்படையாகக் கொண்டு கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் அப்துல் மஜித்.

எங்கபோனாலும் கல்யாணம் ஆகல இதுதான் ஃபர்ஸ்ட் டைம்னு சொல்லனும்... நீ குடுக்குற இருநூறு ரூபாய்க்கு உனக்கு சூடேத்தி மூடேத்துவாங்களா? தாய்ப்பால் என்ன தாவரத்திலேருந்தா வருது...? எல்லாம் அசைவம்தான் போன்ற வசனங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகின்றன.

ரித்விகா, ஏ.வெங்கடேஷ், தினேஷ்குமார், சுஜாதா சரவண சக்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். விஜே இசையமைத்துள்ளார். பாடல்களை வைரமுத்து எழுதியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X