எனக்கு ஏற்ற ஒருவரை நான் இன்னும் சந்திக்கவில்லை..சதா பளிச் பதில் !
சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை சதா.
இவர், விக்ரம், அஜித், மாதவன் என முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி நடித்துள்ளார்.
இவர நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பேட்டி அளித்துள்ள சதா, அதில் தனது திருமணம் குறித்து பேசியுள்ளார்.

குடும்பகுத்துவிளக்கு
இப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்து அனைவரையும் வசியம் செய்தார். இந்த படத்தில் இவர் பேசிய 'போ' வசனமும் இவர் கையை தூக்கி பேசிய விதமும் இன்று வரை டிரெண்டிங்கில் இருக்கும் டைலாக்காகவே உள்ளது.

அன்னியன் படத்தில்
இந்த திரைப்படத்தின் மூலமாக ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார் சதா. அதன் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில், விக்ரமுன் அன்னியன் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்திலும் அம்சமான குடும்பப்பெண்ணாக நடித்திருப்பார்.

பிஸியாக
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாததால் கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் இறங்கிய இவர் கவர்ச்சியை தாராளமாகவே காட்டத்தொடங்கினார்.

மசாலா படத்தில்
மார்க்கெட் சுத்தமாக குறைந்துவிட இவர் எலி என்ற படத்தில் வடிவேலுவிற்கு ஜோடியாக நடித்தார். மேலும், டார்ச் லைட் என்ற மசாலா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவரின் இமெஜ் மொத்தமாக டேமேஜ் ஆகி விட்டது. என்ன சதா இந்த மாதிரி படத்துல எல்லாம் நடிக்கிறீங்க என்று இவர் மீது பல விமர்சனங்கள் வந்தன.

ஏற்ற ஒருவரை சந்திக்கவில்லை
இந்நிலையில் சதா அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், திருமணம் குறித்து கேட்டபோது, திருமணம் குறித்து இப்போதைக்கு எந்த எண்ணமும் இல்லை. எனக்கு ஏற்ற ஒருவரை நான் இன்னும் சந்திக்க இல்லை என்றும், அப்படி ஒருவரை சந்தித்தால் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











