முதன்முறையாக டாட்டூ போட்ட அந்நியன் ஹீரோயின் சதா.. அதுவும் என்ன விஷயத்துக்காக தெரியுமா?

சென்னை: ஜெயம், திருப்பதி, அந்நியன் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சதா சமீப காலமாக சினிமாவை விட்டு விலகி வைல்டு லைஃப் போட்டோகிராஃபியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

இதுவரை டாட்டூ என்றாலே தேவையற்ற ஒன்றாக நினைத்துக் கொண்டிருந்த நடிகை சதா முதன்முறையாக டாட்டூ போட்டுள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும், தனது டாட்டூ வீகன் டாட்டூ என்றும் குறிப்பிட்ட ஒரு காரணத்திற்காக போட்டுள்ளேன் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

ஜெயம் படத்தில் அறிமுகம்

ஜெயம் படத்தில் அறிமுகம்

கடந்த 2002ல் தெலுங்குல் வெளியான ஜெயம் படம் தமிழில் 2003ல் அதே பெயரில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியானது. இரண்டு படங்களிலும் நடிகை சதா நடித்து தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து அறிமுகமானார். போயா என அவர் கையை காட்டி செல்லமாக ஜெயம் ரவியை போக சொல்லும் காட்சி பல பெண்களை அப்படியே அந்த நேரத்தில் செய்யத் தூண்டியது. கவிதையே தெரியுமா பாடல் ஒலிக்காத வீடுகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு செம ஹிட் அடித்தது.

அந்நியன் சதா

அந்நியன் சதா

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என ஏகப்பட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக மாறினார் நடிகை சதா. எதிரி, வர்ணஜாலம், அந்நியன், திருப்பதி, உன்னாலே உன்னாலே என அடுத்தடுத்து சதா தமிழிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான அந்நியன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்து ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் சதா.

சினிமாவிலிருந்து விலகி

சினிமாவிலிருந்து விலகி

2007ம் ஆண்டு வெளியான உன்னாலே உன்னாலே படத்திற்கு தமிழில் நடிகை சதாவிற்கு பெரிய படங்கள் அமையவில்லை. புலி வேஷம், எலி, டார்ச்லைட் உள்ளிட்ட படங்களில் நடித்த சதா 2018ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதையே நிறுத்தி விட்டு தற்போது வைல்டு லைஃப் போட்டோகிராஃபியில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

முதல் டாட்டூ

முதல் டாட்டூ

நடிகை சதாவிற்கு டாட்டூ என்றாலே ஒரு வித பயமாக இருந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக தனது கையில் டாட்டூ ஒன்றை குத்தியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளார். மேலும், அந்த டாட்டூ மற்ற டாட்டூக்கள் மாதிரி எல்லாம் இல்லை என்றும் இது வீகன் டாட்டூ என்றும் புதிய விளக்கத்தையே கொடுத்திருக்கிறார் சதா.

வீகன் டாட்டூ

வீகன் டாட்டூ

டாட்டூவுக்கு பயன்படுத்தப்படும் அந்த இன்க் மிருகத்தில் இருந்து எடுக்கவில்லை என்பது தான் வீகன் டாட்டூ என சொல்லப்படுகிறது. விலங்கு நல ஆர்வலரான நடிகை சதா வீகனிஸத்தை ஆதரித்தும் புலிகளை பாதுகாக்கும் கருத்தை ஆதரித்தும் தனது கையில் செடி மற்றும் புலியின் பாதம் இருக்கும் டிசைன் டாட்டூவை குத்தி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X