அந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதால் பல முறை கதறி அழுதிருக்கிறேன்..பிரபல நடிகை குமுறல்!
சென்னை: சந்திரமுகி படத்தில் நடிக்க கிடைக்க வாய்ப்பை நழுவ விட்டதால் பல முறை அழுதிருப்பதாக பிரபல நடிகை மனம் திறந்துள்ளார்.
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை சதா. தெலுங்கில் நிதின் நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.
தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்த சதா, தமிழில் ரீமேக் செய்யப்பட்ட ஜெயம் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார்.
இதயத்தில் பிரச்சினை.. உயிருக்கு போராடும் 5 வயது சிறுவன்.. அவசர ஹார்ட் சர்ஜரிக்கு உதவுங்கள் ப்ளீஸ்

அந்நியன் படத்தில்
இதன்மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் ஆனார் சதா. தொடர்ந்து மாதவனுடன் எதிரி, ஸ்ரீகாந்துடன் வர்ணஜாலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் வெளியான அந்நியன் படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் சதா.

கடைசியாக டார்ச் லைட்
இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்த சதா, கடைசியாக 2018ஆம் ஆண்டு டார்ச் லைட் என்ற படத்தில் நடித்தார்.

பல முறை கதறல்
அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் இல்லை. தற்போது தெலுங்கில் கிட்டி பார்ட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை சதா, தான் நழுவ விட்ட பட வாய்ப்பை நினைத்து பலமுறை அழுததாக தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி படம்
அதாவது, கடந்த 2005ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், நயன்தாரா, பிரபு, ஜோதிகா, மாளவிகா, வினித், நாசர், வடிவேலு என ஒரு பெரும் நடிகர் பட்டாளமே நடித்திருந்தது அந்தப் படத்தில்.
Recommended Video

இரண்டு முறை வாய்ப்பு
படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் இப்படத்தில் நடிக்க இரண்டு முறை வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் நடிக்க முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார் சதா.

மாளவிகா கேரக்டரில்
மேலும் சந்திரமுகி படத்தில் நடிக்க முடியாமல் போனதை நினைத்து பலமுறை கதறி அழுததாகவும் கூறியுள்ளார் சதா. சந்திரமுகி படத்தில் மாளவிகா கேரக்டரில் சதா நடிக்க இருந்ததாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications