பாலியல் தொழிலாளியாக நடிகை சதா ரீ-என்ட்ரி!

By Vignesh Selvaraj

சென்னை : தமிழ் சினிமாவில் 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சதா. அதைத் தொடர்ந்து விக்ரம் ஜோடியாக 'அந்நியன்', அஜித்துடன் 'திருப்பதி' ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய உயரத்தை சதாவால் எட்ட முடியவில்லை. மார்க்கெட் இழந்து சில காலம் வீட்டில் இருந்தார். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது 'டார்ச் லைட்' எனும் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார் சதா.

Actress Sadha re-entry via Torch light

இந்தப் படத்தை 'தமிழன்', 'கி.மு', 'துணிச்சல்' ஆகிய படங்களை இயக்கிய அப்துல் மஜீத் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சதா பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்கிறாராம். சதா திரும்பி நிற்பது போல் இருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்திற்காக, பாலியல் தொழிலாளிகள் சிலரைச் சந்தித்த இயக்குநர் அப்துல் மஜீத், அவர்களிடம் கேட்டறிந்த தகவல்களை வைத்து 'டார்ச் லைட்' படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளாராம்.

இந்தப் படத்திற்கு JV இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறதாம்.

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது. வெகு விரைவில் படத்தின் ட்ரெய்லர், ஆடியோ வெளியீடு பற்றிய விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: sadha new movie first look சதா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X