Sadha: திருமணம் செய்யாததற்கு காரணம் இதுதான்.. நடிகை சதா ஓபன் டாக்!

சென்னை: கடந்த 2002ம் ஆண்டில் வெளியான ஜெயம் படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தவர் சதா.

இந்தப் படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது. தொடர்ந்து விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார் சதா.

Actress Sadha revealed the reason for not getting married

தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்துவந்த சதா, ஒரு கட்டத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார்.

39 வயதாகியும் திருமணம் செய்யாத நடிகை சதா: நடிகை சதா கடந்த 2002ம் ஆண்டில் வெளியான ஜெயம் என்ற படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். இவரது முதல் படத்திலேயே ஜெயம்ரவியுடன் இணைந்து நடித்தார். இருவருக்குமே இது அறிமுகப்படம்தான். இதேபோல இயக்குநர் ராஜாவிற்கும் இந்தப் படம் முதல் படம். ஆனாலும் முதல் படம் என்ற ஃபீலை கொடுக்காமல் இயல்பான இயக்கம் மற்றும் நடிப்பால் இவர்கள் அனைவரும் படத்தின் அதிரிபுதிரி வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

அந்த வகையில் முதல் படமே சிறப்பாக அமைய, தொடர்ந்து, எதிரி, வர்ணஜாலம், அந்நியன், பிரியசகி, உன்னாலே உன்னாலே, திருப்பதி என அஜித், விக்ரம் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்தா சதா. சங்கர் இயக்கத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்த அந்நியன் படம் இவருடைய கேரியரில் மிகவும் சிறப்பாக அமைந்தப் படம். இவரது கேரக்டர் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்தது.

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தியிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்துள்ளார் சதா. ஒருகட்டத்தில் தயாரிப்பாளராகவும் மாறினார். கடந்த 2018ம் ஆண்டில் வெளியான டார்ச் லைன் என்ற படத்தில் நடித்து தயாரித்தும் இருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிற்குள் முடங்கியிருந்த சதா, தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தான் இதுவரை திருமணம் செய்யாததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Actress Sadha revealed the reason for not getting married

திருமணம் செய்துக் கொண்டால் நம்முடைய சுதந்திரம் பறிபோய்விடும் அதனால்தான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை என்று 39 வயதான சதா தெரிவித்துள்ளார். திருமண பந்தத்தில் புரிதல் ஏற்படலாம் அல்லது ஏற்படாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சதா கூறியுள்ளார். திருமணம் செய்துக் கொண்டால் தன்னுடைய ஆசைகளை தொடர முடியாமல் போகலாம் என்றும் சதா தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார்.

பல திருமணங்கள் வெற்றியடைவதில்லை என்று குறிப்பிட்டுள்ள சதா, பலர் பிரிந்து செல்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தக் காரணங்களால்தான் தான் திருமணம் செய்துக் கொள்ளும் எண்ணத்தை கைவிட்டதாகவும் சதா கூறியுள்ளார். விலங்குகள் நல ஆர்வலராக உள்ள சதா, தொடர்ந்து விலங்குகளுடன் தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். ஹோட்டல் ஒன்றையும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X