பிரபல நடிகைக்கு நிர்வாணப் படம் அனுப்பிய நபர்.. உங்கள் மனநோயை என் மீது திணிப்பதா? ஆவேசமான ஹீரோயின்!
சென்னை: பிரபல நடிகைக்கு ஒருவர் நிர்வாணப்படம் அனுப்பியதை அடுத்து அவரை விளாசித் தள்ளி இருக்கிறார்.
பிரபல மலையாள நடிகை சாதிகா வேணுகோபால். இவர், மலையாளத்தில் பல சில படங்களில் நடித்துள்ளார்.
கலிகாலம், எம்.எல்.ஏ மணிபாதம் கிளாசும் குஸ்தியும், ஓர்குட் ஒரு ஓர்மகூட்டு உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

டிவி நிகழ்ச்சிகள்
ஏராளமான விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார். பட்டுசாரி என்ற டிவி தொடரில் நடித்ததன் மூலம் மலையாள ரசிகர்களிடையே இன்னும் பிரபலமானார். இவர் தொழிலதிபர் பிபின் மனரியை காதலித்து கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். பல டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடுமையான விமர்சனம்
மற்ற நடிகைகளைப் போல சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சாதிகா, சில நாட்களுக்கு முன் பதிவு செய்திருந்த தகவல் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வினித் என்ற நபர், நிர்வாண போட்டோ ஒன்றை சாதிகாவின் சமூக வலைதளப் பக்கத்துக்கு அனுப்பியுள்ளார். இதனால் கொதித்துப் போன அவர், அந்த செய்தியையும் போட்டோவையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து போஸ்ட் செய்து, கடுமையாக விமர்சித்துள்ளார்.

திறப்பதே இல்லை
அவர் கூறியிருப்பதாவது: 'இதுபோன்ற பிறப்புகள் சாபம். முதுகெலும்புக்கு பதிலாக ரப்பரை கொண்டவர்கள் இவர்கள். பெற்ற தாய்க்கு கூட அமைதியை தராதவர்கள் இவர்கள். இவர்களுக்கு பெண் என்ற சொல்லுக்கு காமம் என்பது மட்டுமே பொருளாகத் தெரிகிறது. இதுபோன்ற பிறப்புகளால்தான் பலர் தங்கள் இன்பாக்சை திறப்பதே இல்லை.

யாருடைய கவலை?
கேள்விகளுக்குப் பதில் அளிப்பதில்லை. இவர்கள், மொத்த ஆண்களையும் அருவருப்பானதாக மாற்றுகிறார்கள். பெண்கள் கால்கள், தொப்புள், வயிற்றைக் காண்பிப்பதால் அதிக கவலை கொள்கிறார்கள். உண்மையில் இது யாருடைய கவலை? உணர்ச்சிகள் என்பது மனித இயல்பின் ஒரு பகுதி. அதைக் கட்டுப்படுத்த இயலாதது அந்த நபர்களின் பிரச்னை.

திணிக்க வேண்டாம்
நான் என்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் எனக்குச் சொல்லித்தர முடியாது. அதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். என் வீட்டுக்கு வெளியே, பெண்களை/ ஆண்களை எப்படி பார்க்க வேண்டும் என்பது எனது முடிவு. இங்கே வினித் என்ற இந்த நபரை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. எனது புகைப்படங்களும் ஆடையும் உங்களுக்கு பிரச்னையாக இருந்தால், உங்கள் மனநோயை என் மீது திணிக்க வேண்டாம்.

பாலியல் ரீதியாக
அவர் பெயரை ரகசியமாக வைத்திருக்கலாமே என்று கூறுபவர்களுக்கு... இந்த சித்ரவதை மனரீதியாகக் கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. என்னை மனரீதியாக துன்புறுத்தியது அவர் செய்த தவறு. அந்த நபர், நாளை யாரையாவது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்தால், அவர் பற்றிய தகவல்களை இன்று வெளியிடாததற்காக அப்போது வருத்தப்படுவேன். அதனால் இப்போது வெளியிட்டிருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











