புடவை கட்டி.. பூ வைத்து.. நம்ம யோகியா இது? ரஜினியை ஆச்சரியப்பட வைத்த நடிகை தன்ஷிகா.. கலக்கல் போட்டோ!

சென்னை: நடிகை சாய் தன்ஷிகாவின் புதிய கெட்டப்பை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ஆச்சரியத்தில் திளைத்துப்போன போட்டோ இணையத்தில் வெளியகியுள்ளது.

நடிகை தன்ஷிகா மனதோடு மழைக்காலம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை தன்ஷிகா. தொடர்ந்து பேராண்மை, மாஞ்சா வேலு, அரவாண், பரதேசி, யாயா, திறந்திடு சீசே, கபாலி, இருட்டு, லாபம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார் சாய் தன்ஷிகா. கபாலி படத்தில் நடிகை தன்ஷிகா ரஜினிகாந்துக்கு மகளாக யோகி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

ஆச்சரியப்பட்ட ரஜினி

ஆச்சரியப்பட்ட ரஜினி

இதில் ஆம்பளை போன்று ஹேர் கட் செய்துக் கொண்டு, துப்பாக்கியும் கையுமாக அடியாள் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் தன்ஷிகா. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்து ஆச்சரியப்பட்டு பார்க்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

புடவை கட்டி.. பூ வைத்து..

புடவை கட்டி.. பூ வைத்து..

அதில் புடவை கட்டி, பூ வைத்து அடக்கம் ஒடுக்கமாக உள்ளார் தன்ஷிகா. தன்ஷிகாவை இந்த கெட்டப்பில் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், நம்ம யோகியா இது என்பதை போல ரியாக்ஷன் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள தன்ஷிகா, இந்த போட்டோ ஷிகாரு படப்பிடிப்பின் போது எடுத்ததாக தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்தார்

ரஜினிகாந்த் அதிர்ச்சி அடைந்தார்

அப்போது ரஜினிகாந்த் தனது அண்ணாத்த படத்தின் படப்பில் இருந்தார்.
நாங்கள் ஹைதராபாத்தில் ஒரே மாடியில் ஷூட்டிங்கில் இருந்தோம், யோகி, தேவிகாவாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார் & இந்தப் போட்டோவே அதற்கு சாட்சியாக இருக்கலாம். எந்த ஒரு கலைஞருக்கும் இது உண்மையான வெற்றி என்று நான் நினைக்கிறேன். அதுதான் எனது வேலையில் எனக்கு உந்துதலாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Recommended Video

படம் பாத்துட்டு என் அம்மா சொன்னது | Actress Sai Dhanya interview | Filmibeat Tamil
அடுத்து யோகிடா படம்...

அடுத்து யோகிடா படம்...

ஷிகாரு படம் சாய் தன்ஷிகாவின் அப்கம்மிங் தெலுங்கு படம் ஆகும். இந்தப் படத்தை ஹரி கொல்கனி இயக்கி வருகிறார். சாய் தன்ஷிகா கடைசியாக எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் வெளியான லாபம் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து நடித்திருந்தார். அடுத்ததாக கோலிவுட்டில் யோகிடா என்ற ஆக்ஷன் கம் எண்டெர்டெய்னர் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X