ஐயையோ... உங்ககிட்ட சம்பளம் வாங்கமாட்டேன்... அடம் பிடித்த ஹீரோயின், அசந்து போன இயக்குனர்!

By

Recommended Video

கண்ணைக் கவரும் தன்ஷிகாவின் டிஜிட்டல் ஆர்ட் - வீடியோ

சென்னை: இயக்குனரிடம் சம்பளம் வாங்க மாட்டேன் என்று நடிகை தன்ஷிகா மறுத்துள்ள தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில், தேசிய விருது பெற்ற இயற்கை, ஜீவா நடித்த ஈ, ஜெயம் ரவி நடித்த பேராண்மை, ஆர்யா, விஜய் சேதுபதி நடித்த புறம்போக்கு படங்களை இயக்கியவர் ஜனநாதன்.

Actress sai dhansika refuses to accept Salary in Vijaysethupathi movie

இவர் இப்போது விஜய் சேதுபதி நடிக்கும் 'லாபம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ஸ்ருதிஹாசன், சாய் தன்ஷிகா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஷூட்டிங், சென்னை அருகே செட் அமைத்து நடந்து வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்க, சம்பளம் வேண்டாம் என்று நடிகை சாய் தன்ஷிகா மறுத்துள்ளார். தன்ஷிகாவை, பேராண்மை படத்தில் நான்கு ஹீரோயின்களுள் ஒருவராக அறிமுகப் படுத்தியவர், இயக்குனர் ஜனநாதன். அந்த நன்றியின் அடிப்படையில் சாய் தன்ஷிகா இப்படி கூறியுள்ளார்.

இதுபற்றி படக்குழு கூறும்போது, இந்தப் படத்தில் தன்ஷிகா மாடர்னான கேரக்டரில் நடிக்கிறார். முக்கியமான ரோல் அவருக்கு. இயக்குனர் ஷூட்டிங்கிற்கு அழைத்தபோது மறுவார்த்தை பேசாமல், உடனடியாகக் கிளம்பி வந்தார். தன்னை அறிமுகப்படுத்தியவர் இயக்கும் படம் என்பதால் அந்த மரியாதையின் காரணமாக, அவர் சம்பளம் வேண்டாம் என்று மறுத்துள்ளார். இதனால் இயக்குனர் நெகிழ்ந்து போனார். ஆனாலும் கணிசமானத் தொகையை அவருக்கு ஊதியமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X